குடியரசு தினம்: டெல்லி செங்கோட்டையின் உண்மையான நிறம் இதுவா? வெளியான தகவல்!

By Rayar r  |  First Published Jan 25, 2025, 3:40 PM IST

டெல்லி செங்கோட்டையின் உண்மையான நிறம் சிவப்பு இல்லை; வேறு வண்ணம் என்று ஆதாரங்கள் சுட்டிக் காட்டுகின்றன. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம். 
 


டெல்லி செங்கோட்டை 

இந்தியாவின் 76வது குடியரசு தினம் நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாளை காலை டெல்லி ராஜபாதையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்ற உள்ளார். டெல்லி செங்கோட்டைக்கு என்று தனி வரலாறு உண்டு. இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன், முதன்முதலில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது இங்குதான். அதன்பிறகு செங்கோட்டை வரலாற்றில் முக்கிய இடம் பிடித்துள்ளது.

Latest Videos

சக்தி மற்றும் சுதந்திரத்தின் வரலாற்றுச் சின்னமான டெல்லி செங்கோட்டை 1639 ஆம் ஆண்டு முகலாயப் பேரரசர் ஷாஜஹானால் கட்டப்பட்டது. அவர் தனது அரசவையை ஆக்ராவிலிருந்து டெல்லிக்கு மாற்றியபோது செங்கோட்டையை கட்டினார். கிட்டத்தட்ட 200 ஆண்டுகளாக முகலாயப் பேரரசர்களின் அரசு இல்லமாக செயல்பட்ட செங்கோட்டையில் தான் இந்தியாவின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு தேசியக்கொடி ஏற்றினார். 

வெள்ளை நிறத்தில் செங்கோட்டை?

செங்கோட்டையின் நிறம் சிவப்பு என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் செங்கோட்டையின் அசல் நிறம் வெறும் சிவப்பு மட்டும் அல்ல; சிவப்பு மற்றும் வெள்ளை என்று தகவல்கள் கூறுகின்றன. அதாவது முகலாயப் பேரரசர் ஷாஜஹானால் கட்டப்பட்ட செங்கோட்டை முதலில் வெள்ளை நிறத்தில் மணற்கற்களால் கட்டப்பட்டது. 

பின்பு ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் அந்த வெள்ளைக் கல் சிதிலமடையத் தொடங்கிய போது, ​​ஆங்கிலேயர்கள் அதற்கு சிவப்பு வண்ணம் பூச வேண்டியிருந்தது. இதனால் பின்பு செங்கோட்டை சிவப்பு நிறத்து மாறியதாக தி டெலிகிராஃப் செய்திகள் கூறுகின்றன.

முதலில் அழைக்கப்பட்ட பெயர் என்ன?

செங்கோட்டை முகலாயர்கள் ஆட்சிக் காலத்தில் ''கிலா-இ-முபாரக்'' அதாவது "ஆசீர்வதிக்கப்பட்ட கோட்டை" என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது. இந்திய அரசின் வலைத்தளம் செங்கோட்டை முதலில் வெள்ளை நிறத்தில் இருந்ததாகக் கூறவில்லை. 

ஆனால் செங்கோட்டையின் வெளிப்புறம் ஆரம்பத்தில் சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் இருந்ததாகவும், பின்னர் ஆங்கிலேயர்கள் அதை முழுவதுமாக சிவப்பு நிறத்தில் மாற்றியதாகவும்  இன்க்ரெடிபிள் இந்தியா வலைத்தளம் தெரிவித்துள்ளது.

தி டெலிகிராஃப் செய்திகள்

இந்திய கட்டிடக்கலை ஆய்வின் தலைவர் கே.கே. முகமது, ''செங்கோட்டை என்பது ஒரு தவறான கருத்து. ஏனெனில் அதன் வெளிப்புற கோபுரங்கள் சிவப்பு மணற்கல்லால் ஆனவை என்றாலும், செங்கோட்டையின் பெரும்பகுதி மக்கள் உணர்ந்ததை விட வெண்மையானது'' என்று கூறியுள்ளதாக தி டெலிகிராஃப் செய்திகள் தெரிவிக்கின்றன.

''முகலாயர்கள் கட்டியபோது செங்கோட்டை சிவப்பு மற்றும் வெள்ளை வண்ண‌ங்களில் தான் இருந்தது. பிரிட்டிஷார் ஆட்சிக்கு வந்தபிறகு செங்கோட்டை முழுமையாக சிவப்பு நிறத்துக்கு மாறியது'' என்று முன்னணி பாதுகாப்பு கட்டிடக் கலைஞரான ரதீஷ் நந்தா கூறியதாக தி டெலிகிராஃப் செய்திகள் கூறுகின்றன.

click me!