எனக்கு வயிற்றில் தொற்று உள்ளது, இன்று டெல்லி செல்ல மாட்டேன் என்று டிகே சிவக்குமார் கூறியுள்ளார்.
கர்நாடக முதல்வர் வேட்பாளர் பரிசீலனையில் இருக்கும் டி.கே.சிவக்குமார், தனக்கும், சித்தராமையாவுக்கும் காங்கிரஸ் மேலிடம் அழைப்பு விடுத்துள்ளதாக அறிவித்த சில மணி நேரங்களிலேயே தனது டெல்லி பயணத்தை ரத்து செய்துள்ளார்.
இது அரசியல் வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், விளக்கம் அளித்துள்ளார் டி.கே.சிவக்குமார். தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், "எனக்கு வயிற்றில் தொற்று உள்ளது, இன்று டெல்லிக்கு பயணம் செய்ய மாட்டேன்" என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், 135 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உள்ளனர். என்னிடம் எம்எல்ஏக்கள் யாரும் இல்லை. முடிவை கட்சி மேலிடத்திடம் விட்டுவிட்டேன்” என்று சிவக்குமார் தெரிவித்தார்.
undefined
இதையும் படிங்க..சித்தராமையா Vs சிவக்குமார்.. அடுத்த கர்நாடக முதல்வர் யார் தெரியுமா?
நேற்று 135 எம்எல்ஏக்கள் தங்கள் கருத்தை தெரிவித்து ஒரு வரியில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். ஒரு சிலரே தங்கள் தனிப்பட்ட கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளனர். எனது பலம் 135 எம்எல்ஏக்கள். எனது தலைமையில் காங்கிரஸ் 135 இடங்களில் வெற்றி பெற்றது.
நான் ஒரு விஷயத்தை நம்புகிறேன். தைரியமுள்ள ஒரு மனிதன் பெரும்பான்மையை உருவாக்குகிறான். கடந்த ஐந்து வருடங்களில் என்ன நடந்தது என்பது பற்றி நான் பேச விரும்பவில்லை. கர்நாடகாவை காங்கிரசுக்கு வழங்குவதே எனது நோக்கம் என்று ராகுல் காந்தி, சோனியா காந்தி மற்றும் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோரிடம் உறுதியளித்தேன்" என்று சிவகுமார் கூறினார்.
இதையும் படிங்க..புதிய வழித்தடத்தில் 5 புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள்.. எங்கெல்லாம் தெரியுமா?