
நீதிமன்ற வழக்கறிஞராக இருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்படும் முதல் பெண் நீதிபதி என்ற பெருமையை இந்து மல்கோத்ரா பெற உள்ளார்.
உத்தராகண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எம். ஜோசப் உச்சநீதிமன்ற நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல, உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றிவரும் இந்து மல்கோத்ராவும் உச்ச நீதிமன்ற நீதிபதியாக தேர்வாகி உள்ளார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான கொலிஜியம் என அழைக்கப்படும் நீதிபதிகள் குழு இவர்களை தேர்வு செய்துள்ளது.
முதன் முறையாக
இவர்களின் பெயர்களை மத்திய அரசு அங்கீகரித்திடும் பட்சத்தில் இவர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்பார்கள்.
இவ்வாறு இந்து மல்கோத்ரா நீதிபதியாக பதவியேற்றால், உயர் நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றி நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்படும் முதல் பெண் நீதிபதி என்ற பெருமையை அவர் பெறுவார்.
இவர் வழக்குகளை தீர்த்து வைப்பதில் திறமை வாய்ந்தவர் என்ற பெயர் பெற்றவர் ஆவார்.
இவர் உச்ச நீதிமன்றத்தின் 7-வது பெண் நீதிபதி என்ற பெருமையையும் பெறுவார்.