
புது டெல்லி, நவ.22-
பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு தடை செய்யும் அறிவிப்பு ரகுராம் ராஜனுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பே தெரியும். அதற்கு அவர் சம்மதம் கொடுக்காததன் காரணமாகவே அவர் ராஜினாமா செய்ய அழுத்தம் தரப்பட்டுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.
கருப்பு பணம், கள்ள நோட்டை ஒழிக்கும் நோக்கில் மோடி ரூ.500, ரூ.1000 நோட்டை செல்லாது என்று கடந்த 8-ந்தேதி வெளியிட்ட அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு ஒரு குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது.
அவர்கள் யாரென்றால்
1. பிரதமர் மோடி
2. நிதியமைச்சர் அருண்ஜெட்லி
3. முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம்ராஜன்.
4. ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல்.
5. பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்தி கந்ததாஸ்.
6. முதலீடு மற்றும் கரன்சி துறை செயலாளர் டாக்டர் சவ்ரவ் கார்க்.
7. நிதியமைச்சகத்தில் சில அதிகாரிகள்.
ரூபாய் நோட்டு செல்லாத அறிவிப்பு திட்டம் என்பது கடந்த 6 மாதங்களுக்கு முன், ரகுராம் ராஜன் கவர்னராக இருக்கும் போது திட்டமிடப்பட்டது.
ரகுராம் ராஜன் கடந்த செப்டம்பர் 4-ந்தேதி தான் பதவிகாலம் முடிந்து வெளியேறினார். ஆதலால் அவர் பதவிகாலம் முடிய 3 மாதம் இருக்கும் போதே இந்த திட்டம் குறித்து பேசப்பட்டு விட்டது.
ஆனால், இந்த திட்டம் ரிசர்வ் வங்கியின் கவர்னர் ஒப்புதல் இல்லாமல் செயல்படுத்த முடியாது என்பதால், புதிய கவர்னராக உர்ஜித் படேலை நியமித்த பின் அரசு செயல்படுத்தியுள்ளது. ஆக இந்த திட்டத்தை செயல்படுத்த, உர்ஜித் படேல் திட்மிடப்பட்டே கவர்னராக மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ளார்.
6 மாதங்களுக்கு முன்.....
ரூபாய் நோட்டு செல்லாத தாக அறிவிக்கப்படும் திட்டம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு முடிவு செய்யப்பட்டு உறுதி செய்யப்பட்டது.
ஜூன் மாதம்......
நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளும் அதிகமான அளவு ரூ.100 நோட்டுகளை மக்களிடம் புழக்கத்தில் விட ரகசியமாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஜூன் மாதம் முதல் செயல்படுத்தப்பட்டது.
கடந்த 3 மாதங்களுக்கு முன்.......
கடந்த 3 மாதங்களுக்கு முன் தான் புதிய ரூ.2000 மற்றும் ரூ.500 நோட்டுகள் வடிவமைக்கப்பட்டு அதன் டிசைன் அரசிடம் ஒப்புதல் பெறப்பட்டது.
ஆனால், அந்த நேரத்தில் ரகுராம்ராஜன் 2-வது முறையாக கவர்னராகதொடர விருப்பம் இல்லை எனத் தெரிவித்ததால், ரூபாய் அச்சடிக்கும் பணி தள்ளிப்போடப்பட்டது. ஏனென்றால், அந்த ரூபாய் நோட்டில் அவர் கையெழுத்து இட வேண்டும் என்பதால், ரகுராம் ராஜன் மறுத்துள்ளார். இதனால், நோட்டு அச்சடிக்கும் பணி தள்ளிப்போடப்பட்டது.
சுவிட்சர்லாந்து.....
சுவிட்சர்லாந்தில் உள்ள டி லா ரூய் ஜியோரி என்ற நிறுவனத்தின் உதவியுடன், மைசூருவில் ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் இருக்கும், பாரதிய ரிசர்வ் பேங்க் நோட் முத்ரன் பிரைவேட் லிமிட் அச்சகத்தில் ரூபாய் அச்சடிக்கப்பட்டது.
ஆகஸ்ட் 20.....
ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக உர்ஜித் படேல் அறிவிக்கப்படுகிறார்.
செப்டம்பர் 4-
உர்ஜித் படேல் புதிய கவர்னராக பொறுப்பு ஏற்றதும் பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு செல்லாத அறிவிப்புக்கு பச்சைக் கொடி காட்டுகிறார். அதன்பின் தனது கையெழுத்தின் ஆங்கிலம் மற்றும் இந்தி பிரதியை ரூ.2000 நோட்டில் இடுகிறார். ரகுராம் ராஜன் கவர்னராக இருக்கும் வரை ரூபாய் நோட்டு திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கவி்ல்லை. அதனால், அந்த திட்டம் தள்ளிப்போடப்பட்டது.
மேலும், ரகுராம் ராஜன் நடவடிக்கைகள்
சுப்பிரமணியசாமி மூலம் விமர்சனம் செய்யப்பட்டு, மீண்டும் அவர் 2-வது முறையாக கவர்னர் பதவிக்கு வர விருப்பம் தெரிவிக்காமல் தடை போடப்படுகிறது.
செப்டம்பர் 5-6
ரூபாய் நோட்டுக்களில் புதிய கவர்னர் உர்ஜித் படேல் கையெழுத்து சேர்க்கப்பட்டு, புதிய ரூ2000 நோட்டுகள் அச்சிடும் பணி தொடங்கப்பட்டது.
அக்டோபர் 27-......
ரிசர்வ் வங்கி. தனது இணையதளத்தில் கள்ள நோட்டுக்கள் குறித்த எச்சரிக்கை அறிவிப்பை வெளயிடுகிறது. மேலும், அனைத்து வங்கிகளும் கண்காணிப்பு கேமிரா பொருத்த வேண்டும், ரூ.100 மற்றும் அதற்கு மேல் உள்ள ரூபாய் நோட்டுகள் தீவிர சோதனைக்கு பின் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெற வேண்டும் என்ற உத்தரவு ரிசர்வ் வங்கியால் பிறப்பிக்கப்படுகிறது.
நவரம்பர் 2..........
நம்பர் 2-ந் தேதி முதல் நாட்டில் உள்ள வங்கிகள் அனைத்தும் மக்களிடத்தில் அதிகமாக ரூ.100 நோட்டுகளை அதிகமாக புழக்கத்தில் விட உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
நவம்பர் 7..........
நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளின் தலைவர்களுக்கும் ரிசர்வ் வங்கி மூலம் ரகசிய சுற்றறிக்கை அனுப்பப்படுகிறது. அதில் அனைவரும் தலைமை அலுவலகத்துக்கு அடுத்த நாள் வர வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
நவம்பர் 8 காலை.............
அச்சடிக்கப்பட்ட ரூ.2 ஆயிரம் நோட்டுக்கள் அனைத்து வங்கிகளுக்கும் அனுப்ப தயார் செய்யப்படுகிறது.
நவம்பர் 8 இரவு 7 மணி.....
அனைத்து வங்கிகளின் தலைவர்கள் பிரதமர் அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுகிறது. அந்த கூட்டத்துக்கு அனைத்து அமைச்சர்களும் அழைக்கப்பட்டு இருந்தனர். அப்போது யாருக்கும் செல்போன் உடன் எடுத்து வர அனுமதி அளிக்கப்படவில்லை. ரூபாய் நோட்டு செல்லாத அறிவிப்பு வெளியே கசிந்தால் அது பெரிய விளைவுகளை உண்டாக்கும் என கருதி யாருக்கும் செல்போன் கொண்டு வர அனுமதிக்கப்படவில்லை.
நவம்பர் 8 இரவு 8 மணி....
பிரதமர் மோடி தொலைக்காட்சிகளில் தோன்றி, நாட்டில் புழக்கத்தில் இருக்கும் ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். அப்போது தான் ஒட்டு மொத்த தேசத்துக்கும் இந்த அறிவிப்பு குறித்து தெரியும்.
ஆகவே, ரூபாய் நோட்டு செல்லாது அறிவிக்கும் திட்டம் முதலில் ரகுராம் ராஜனை வைத்துதான் செயல்படுத்த திட்டமிடப்பட்டது. ஆனால், அதற்கு முழுமையாக ஒத்துழைக்கவில்லை என்பதால், அவர் பதவியை ராஜினாமா செய்ய அழுத்தம் கொடுக்கப்பட்டார்.
ஆனால், ரகுராம் ராஜனுக்கு ரூபாய் நோட்டு செல்லாத அறிவிப்பால் கருப்பு பணம், கள்ள நோட்டு ஒழிக்கப்படும் என்ற விஷயத்தில் துளிகூட நம்பிக்கை இல்லை. இது தொடர்பாக கடந்த 2014-ம் ஆண்டு ஒரு அறிக்கையில் அவர் தெளிவாக இதைக் குறிப்பிட்டுள்ளார்.