
வங்கிகளில் ரூ. ஒரு கோடி வரை வீடு, விவசாய , வாகனம், தனிநபர் கடன் பெற்று இருந்தால், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் தவணையை செலுத்த மேலும் 60 நாட்கள் அவகாசம் வழங்கி ரிசர்வ் வங்கி நேற்று உத்தரவிட்டது.
நாட்டில் கருப்புபணம், கள்ளநோட்டுகளை ஒழிக்கும் வகையில் பிரதமர் மோடி கடந்த 8-ந் தேதி ரூ.500, ரூ1000 நோட்டுகளை செல்லாது என அறிவித்தார். அதைத் தொடர்ந்து வங்கியில் பணம் எடுக்க பல்வேறு விதிமுறைகளை ரிசர்வ் வங்கி நாள்தோறும் வௌியிட்டு வருகிறது.
விதிமுறைகள் வெளியீடு
இந்நிலையில், வங்கிகளில் வீட்டுக்கடன், கார், பைக் லோன், , தனிநபர் கடன் , தொழில் செயல்பாட்டு முதலீட்டு கடன் , விவசாய கடன் , வியாபாரக் கடன் பெற்றவர்கள் நவம்பர் மற்றும் டிசம்பர் மாத தவனையை செலுத்த கூடுதலாக 60 நாட்கள் அவகாசம் வழங்கி ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
அதாவது, நவம்பர் 1ந்தேதி முதல் டிசம்பர் 31-ந்தேதி வரையிலான தவனைகளுக்கு மட்டுமே இந்த விதிமுறை தளர்வு பொருந்தும். அதாவது இந்த இரு மாத தவனைகளைச் செலுத்த அடுத்த 60 நாட்கள், 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை எடுத்துக் கொள்ளலாம்.
இந்த விதிமுறை தளர்வு தொழில் நடத்தும் நிறுவனங்கள் செயல்பாட்டு முதலீட்டுக்காக வங்கியில் ரூ. ஒரு கோடி வரை கடன் பெற்று இருந்தாலும் பொருந்தும்.
கடன் தவணையை செலுத்துவதற்கு குறுகிய கால அவகாசமே கடன் வாங்கியவர்களுக்கு தரப்பட்டுள்ளது, மாறாக கடன் சீரமைப்பு செய்யப்படவில்லை என்பதை வங்கிககள், நிதி நிறுவனங்கள் உணர வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய அரசு அறிவித்த ரூபாய்நோட்டு செல்லாத அறிவிப்பால், நிறுவனங்கள், தனிநபர்கள் அளிக்கும் காசோலை பரிமாற்றம் உள்ளிட்ட நடவடிக்ைககள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வாரத்துக்கு ரூ.24 ஆயிரம் வரை மட்டுமே எடுக்க வேண்டும் என்ற விதிமுறையால் கடன் பெற்றவர்கள் தங்கள் தவணையை முறையாக செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்கள். அதற்காக கடன் தவணை செலுத்தும் விதிமுறையை தளர்த்தி ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டது.