கோவோவேக்ஸ் தடுப்பூசிக்கு ஒப்புதல்... அவசர கால பயன்பாட்டிற்கு மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி!!

Published : Mar 09, 2022, 08:55 PM ISTUpdated : Mar 09, 2022, 08:57 PM IST
கோவோவேக்ஸ் தடுப்பூசிக்கு ஒப்புதல்... அவசர கால பயன்பாட்டிற்கு மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி!!

சுருக்கம்

தற்போது கோவோவேக்ஸ் கொரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. 

தற்போது கோவோவேக்ஸ் கொரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா என்னும் கொடிய வைரஸ் உலக அளவில் பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தியுள்ளது. 2019ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட இந்த வைரஸ் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களை காவு வாங்கியது. அடுத்தடுத்து உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் இந்த ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்தில் மீண்டும் அதன் ஆட்டத்தை துவக்கிய நிலையில் தற்போது சற்றே அடங்கியுள்ளது. இதை அடுத்து கொரோனாவை கட்டுப்படுத்தும் ஒரே அஸ்திரம் தடுப்பூசி என்னும் நிலை ஏற்பட்டது. அதன்படி உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசிகளை தயார் செய்து மக்களுக்கு செலுத்தி வருகின்றன.

தடுப்பூசி தான் மக்களை காக்கும் பேராயுதம் என உலக சுகாதார அமைப்பும், உலக நாடுகளின் தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அதன் பரவலை தடுக்க தடுப்பூசி ஒன்றே தீர்வு என்ற நிலை ஏற்பட்டது. இதை அடுத்து இந்தியா முழுவதிலும், தடுப்பூசி போடும் பணி மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் கொரோனா தடுப்பூசி போடுவதில் இந்தியா பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. இந்த நிலையில் தற்போது கோவோவேக்ஸ் கொரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. 12 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் இளைஞர்களுக்கு கோவோவேக்ஸ் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்தலாம் என அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் நோவோவேக்ஸ் நிறுவனம், கொரோனாவுக்கு எதிராக நோவோவேக்ஸ் என்ற தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இந்த தடுப்பூசியை இந்தியாவில் கோவோவேக்ஸ் என்ற பெயரில் தயாரிக்கப்படுகிறது. இதற்கான ஒப்பந்தம் புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனத்துடன் போடப்பட்டுள்ளது. ஐரோப்பிய மருத்துவ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட நோவோவேக்ஸ் தடுப்பூசியின் தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டது தான் கோவோவேக்ஸ் தடுப்பூசி. கோவோவேக்ஸ் தடுப்பூசியை பெரியவா்களின் அவசர பயன்பாட்டுக்கு கடந்த ஆண்டு டிசம்பா் 28 ஆம் தேதி இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்கம் அனுமதி அளித்திருந்தது. இந்த நிலையில் தற்போது கோவோவேக்ஸ் கொரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

Forbidden Indian Places: இந்தியர்களுக்கே அனுமதி இல்லை.. வெளிநாட்டவர்களுக்கு மட்டும் திறந்திருக்கும் இந்தியாவின் 5 இடங்கள்
Petrol Bikes : ஏப்ரல் 2028 முதல் பெட்ரோல் பைக்குகளுக்கு தடையா? அரசு எடுத்த அதிரடி முடிவு! எங்க தெரியுமா?