
மத்திய பிரதேசத்தில் துர்க்கை அம்மனுக்கு பக்கத்தை ஒருவர், தனது நாக்கை அறுத்து, காணிக்கை செலுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துர்க்கை அம்மனின் தீவிர பக்தையான குட்டி தோமர் என்ற பெண். தினமும் வீட்டில் இருந்து 50பது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தர்சமா கிராமத்தில் உள்ள பிஜாசென் மாதா கோவிலுக்கு வந்து துர்க்கை அம்மனை வழிப்படுவது வழக்கம்.
அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன் குட்டி தோமர், சாமி தரிசனம் செய்து முடித்து விட்டு தன்னுடைய நாக்கை அறுத்துக் கொண்டார். இவர் இப்படி செய்தது மற்ற பக்தர்களை அதிர்ச்சியடையச் செய்தது.
பின் மயங்கி விழுந்த இவரை மீட்டு உடனடியாக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து குட்டி தோமர் கணவர் கூறுகையில், தங்களுக்கு திருமணம் ஆனது முதல் என்னுடைய மனைவி தினமும் காலை, மாலை என இரு வேளையும், 50 கிலோமீட்டர் கடந்து வந்து துர்க்கை அம்மனை வழிபடுவது வழக்கம். எப்போதும் அம்மனின் பக்தியிலேயே இருப்பார் ஆனால் ஏன் இப்படி செய்தார் என தெரியவில்லை என வேதனையோடு கூறியுள்ளார்.