துணை முதல்வராகிறாரா தேவேந்திர ஃபட்னாவிஸ்? பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறுவது என்ன?

By Narendran SFirst Published Jun 30, 2022, 7:06 PM IST
Highlights

மகாராஷ்டிரா துணை முதல்வராக தேவேந்திர ஃபட்னாவிஸ் பொறுப்பேற்க வேண்டும் என பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா தெரிவித்துள்ளார். 

மகாராஷ்டிரா துணை முதல்வராக தேவேந்திர ஃபட்னாவிஸ் பொறுப்பேற்க வேண்டும் என பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவின் துணை முதல்வராக தேவேந்திர ஃபட்ன்வாய்ஸ் பொறுப்பேற்க வேண்டும் என்று மத்திய தலைமை செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை சேர்ந்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 40க்கும் மேற்பட்ட சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்கொடி தூக்கினர். இதனால், மகா விகாஸ் கூட்டணி அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இந்த நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கான சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை நடத்த மகாராஷ்டிரா ஆளுநர் அழைப்பு விடுத்தார். மகாராஷ்டிர ஆளுநரின் நம்பிக்கை வாக்கெடுப்பு அறிவிப்புக்கெதிராக சிவசேனை கட்சியின் தலைமை கொறடா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆளுநரின் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிரான சிவசேனையின் இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தத் தடையில்லை என உத்தரவிட்டு, வழக்கை வரும் ஜூலை 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இதையும் படிங்க: மகாராஷ்டிரா அரசியலில் ஏமாற்றமும் மாற்றமும் , கை ஓங்கிய ஏக்நாத் ஷிண்டே

இந்த நிலையில் உத்தவ் தாக்கரே தமது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடா்ந்து, ஆளுநா் மாளிகைக்கு சென்ற உத்தவ் தாக்கரே தனது ராஜிநாமா கடிதத்தை ஆளுநா் பகத் சிங் கோஷியாரியிடம் சமா்ப்பித்தாா். அவருடைய ராஜிநாமாவை ஆளுநா் ஏற்றுக்கொண்டதாக ஆளுநா் மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனா். இதனை அடுத்து ஆளுநர் பகத்சிங் கோஷியாரியை சந்தித்த பாஜக மூத்த தலைவர் தேவேந்திர ஃபட்னவீஸும், ஏக்நாத் ஷிண்டேவும் மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரினர். மகாராஷ்டிர மாநிலத்தில், முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரே தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், மீண்டும் சிவசேனை ஆட்சி அமையவிருக்கிறது. இந்த அரசுக்கு பாஜக ஆதரவு அளிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மகாராஷ்டிரா அரசியலில் திருப்புமுனை... முதல்வர் ஆகிறார் ஏக்நாத் ஷிண்டே!!

முதற்கட்டமாக தேவேந்திர ஃபட்னவீஸ் முதல்வராக பதவியேற்கவிருப்பதாக கூறப்பட்ட நிலையில், மகாராஷ்டிர புதிய முதல்வராக சிவசேனா கட்சியைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே பதவியேற்பார் எனவும், தான் அரசில் இருந்து விலகி, அது சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வேன் எனவும் அறிவித்தார். மேலும் இன்று இரவு 7.30 மணிக்கு பதவியேற்பார் எனவும் அவர் தெரிவித்தார். இந்த நிலையில் மகாராஷ்டிராவின் துணை முதல்வராக தேவேந்திர ஃபட்ன்வாய்ஸ் பொறுப்பேற்க வேண்டும் என்று பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா கோரிக்கை விடுத்துள்ளார். இதுக்குறித்து பேசிய அவர், மகாராஷ்டிரா அரசில் தேவேந்திர ஃபட்னாவிஸ் அங்கம் வகிக்க வேண்டும் என்று பாஜகவின் மத்திய தலைமை முடிவு செய்துள்ளது. எனவே, அவரிடம் தனிப்பட்ட முறையில் கோரிக்கை விடுத்து, மகாராஷ்டிராவின் துணை முதல்வராக தேவேந்திர ஃபட்ன்வாய்ஸ் பொறுப்பேற்க வேண்டும் என்று மத்திய தலைமை கூறியுள்ளது என்று தெரிவித்தார். 

click me!