சபரிமலைக்கு வர வேண்டாம்..! கொரோனா பீதியால் தேவசம் போர்டு அதிரடி முடிவு..!

By Manikandan S R SFirst Published Mar 10, 2020, 4:13 PM IST
Highlights

கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் சபரிமலையில் நடைபெறும் பூஜைகளில் பங்கேற்க பக்தர்கள் வர வேண்டாம் என தேவசம் போர்டு அறிவித்துள்ளது. மக்கள் ஒன்றாக கூடும் இடங்களில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதால் வரும் 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை சபரிமலையில் நடைபெறும் மாத பூஜைகளில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனவும் வழக்கம் போல நடைதிறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும் எனவும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்திருக்கிறது. 

சீன நாட்டின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் முதன்முதலில் பரவிய கொரோனா வைரஸ் அந்நாட்டின் அனைத்து மாகாணங்களையும் பாதித்துள்ளது.  இந்த வைரஸ் பாதிப்பிற்கு சீனாவில் மட்டும் பலி எண்ணிக்கை தாறுமாறாக அதிகரித்துள்ளது. தற்போது 3,119 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக சீன அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் தைவான், ஜப்பான், கொரியா, அமெரிக்கா, இந்தியா என 25 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் உலக நாடுகள் பீதி அடைந்துள்ளனர்.

இந்தநிலையில் தற்போது இந்தியாவிலும் கொரோனா நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 46 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களையும் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு மத்திய அரசு எச்சரித்துள்ளது. இந்தநிலையில் கேரளாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரையிலும் அங்கு 15 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

கொரோனாவிடம் தப்ப கள்ளச்சாராயம் குடித்த மக்கள்..! 27 பேர் துடிதுடித்து பலி..!

இதனிடையே கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் சபரிமலையில் நடைபெறும் பூஜைகளில் பங்கேற்க பக்தர்கள் வர வேண்டாம் என தேவசம் போர்டு அறிவித்துள்ளது. மக்கள் ஒன்றாக கூடும் இடங்களில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதால் வரும் 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை சபரிமலையில் நடைபெறும் மாத பூஜைகளில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனவும் வழக்கம் போல நடைதிறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும் எனவும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்திருக்கிறது. முன்னதாக கேரளாவில் பள்ளிகள் மற்றும் திரையரங்குகள் அனைத்தும் மார்ச் 31ம் தேதி வரை செயல்படாது என தெரிவிக்கிப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

click me!