
பிரதமர் மோடியின் செல்லாத ரூபாய் நோட்டுக்கு உயில்பலி 58 ஆக உயர்ந்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் நேற்று இருவர் மாரடைப்பால் உயிரிழந்தனர்.
அலிகார் மாவட்டம், நாக்லா மான்சிங் நகரைச் சேர்ந்தவர் பாபு லால்(வயது50). இவரின் மகளுக்கு வரும் 26-ந்ததேதி திருமணம் வைத்துள்ளார். அதற்கான செலவுக்கு பணம் தேவைப்பட்டுள்ளது. மேலும், தன்னிடம் உள்ள செல்லாத ரூபாய் நோட்டுக்களை மாற்ற கடந்த 3 நாட்களாக வங்கிகக்கு நடையாய் நடந்தும், மாற்றமுடியவில்லை. இதனால், பெரிதும் மனஉளைச்சலில் பாபுலால் இருந்தார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் ரங்கியில் இருந்து வீட்டுக்கு வந்த பாபுலால் நெஞ்சு வலிக்கிறது என்று கூறினார். மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வரும் வழியில் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
உயிர்பலி 58 ஆக உயர்ந்தது...
இதேபோல, ஜமால்பூர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது இத்ரீஸ்(வயது45). இவருக்கு வங்கியில் கணக்கு இல்லை. தன்னிடம் இருக்கும் செல்லாத ரூபாய் நோட்டுகளை வங்கியில்மாற்ற கடந்த சில நாட்களாக மாற்ற முயன்றும் முடியவில்லை. இதனால் மனமுடைந்து, நேற்றுமுன்தினம் வங்கியில் இருந்து வீட்டுக்கு திரும்பிக்கொண்டு இருந்தபோது, மாரடைப்பால் மரணமடைந்தார்.
ஏற்கனவே, 55 பேர் உயிரிழந்திருந்த நிலையில், கொல்கத்தாவில் நேற்று ஒரு முதியவர் உயிரிழந்தார். இந்நிலையில், உத்தரப்பிரதேச இரு உயிரழப்புகளைச் சேர்த்து மொத்தம் 58 ஆக உயர்ந்துள்ளது.