
டெல்லியில் சாலையில் இளம்பெண் ஒருவரை இரண்டு பேர் தாக்கியும், பாலியல் துஷ்பிரயோகம் செய்தும், காரில் தரதரவென்று இழுத்து சென்று, அந்த பெண் நடுரோட்டில் விழும் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகி சச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி அமர் காலணியில் இந்த சம்பவம் நடந்தேறியுள்ளது. ஒரு தனியார் காரில் அமர்ந்திருந்த பெண், சாலையில் தகராறு செய்த இரு ஓட்டுனர்களுக்கு இடையே தலையிட முயன்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் இரண்டு தினங்களுக்கு முன்பு நடந்ததாக கூறப்படுகிறது.
சாலையில் இரு ஓட்டுநனருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை தடுக்க முயன்ற போது அந்த பெண் இரண்டு நபர்களால் தாக்கப்பட்டுள்ளார். மேலும் அதில் ஒருவன், அந்த பெண்ணிடம் பாலியலில் சீண்டலும் ஈடுப்பட்டுள்ளான். மேலும் காரில் அந்த பெண்ணை தரதரவென்று இழுத்து கீழே விழ வைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடுரோட்டில் விழுந்த அந்த பெண்ணிற்கு ற்றி இருப்பவர்கள் முதலுதவி அளித்தனர்.
பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் டெல்லி போலீசார், 24 மணி நேரத்தில் காரின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர். மேலும் பெண்ணை தாக்கிய நபரின் வாகனத்தை பறிமுதல் செய்தனர். தலைநகர் டெல்லியில், சமீப காலமாக பொது இடங்களில் பெண்களுக்கு எதிராக நடந்தேறும் குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது