காங்கிரஸ் போராட்டத்தில் மோடி வாழ்க கோஷம் !! டெல்லியில் செம காமெடி !!

Published : Sep 11, 2018, 08:51 AM ISTUpdated : Sep 19, 2018, 09:22 AM IST
காங்கிரஸ் போராட்டத்தில் மோடி வாழ்க கோஷம் !! டெல்லியில் செம காமெடி !!

சுருக்கம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து டெல்லியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தின்போது  திடீரென மோடி வாழ்க என கூட்டத்தில் கோஷமிட்டதால் பயங்கர சிரிப்பொலி ஏற்பட்டது. ராகுல் என்பதற்குப் பதிலாக மோடி என்று சொன்னதால் இந்தக் குழப்பம் ஏற்பட்டது.

இந்தியாவில் பெட்ரோல்,டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதையடுத்து பெட்ரோல்,டீசல் விலையை குறைக்க வலிறுத்தி காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் சார்பில் நேற்று மறியல் போராட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் திமுக, இடது சாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வட மாநிலங்களைப் பொறுத்தவரை  இந்தப் போராட்டம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

டெல்லியில் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இந்த மறியல் போராட்டத்தில் பங்கேற்றனர். சிறிது நேரத்தில் ராகுல் அங்கிருந்து கிளம்பிச் சென்றவுடன், அங்கிருந்த தொண்டர்கள் பாஜக மற்றும் மோடி அரசுக்கு எதிராக கோஷமிட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது ராகுல் காந்தி வாழ்க என்று கோஷமிட்டவாறு இருந்தனர். அப்போது ஒரு தொண்டர் மோடி என சத்தமாக கத்தினார். தொண்டர்கள் ஒழிக என்று கத்துவதற்கு பதிலாக வாழ்க என்று கோஷமிட்டுவிட்டனர்.

தொடர்ந்து இரண்டு,மூன்று முறை அவ்வாறு கோஷமிட்ட அவர்கள் தவறாக முழக்கமிட்டதை லேட்டாகத்தான் உணர்ந்தனர். இதனால் அங்கு திடீர் சிரிப்பொலி எழுந்தது,

 

PREV
click me!

Recommended Stories

அஸ்ஸாமை பாகிஸ்தானின் ஒரு பகுதியாக மாற்ற காங்கிரஸ் சதி செய்தது - பிரதமர் மோடி குற்றச்சாட்டு
MGNREGA மாற்றங்கள்: ஏழைகள், விவசாயிகள் மீதான தாக்குதல் - சோனியா காந்தி விமர்சனம்