கல்விக்கு வயது ஒரு தடை இல்லை... தள்ளாத வயதில் பிஎச்டி தேர்வெழுதிய 89 வயது முதியவர்!

By vinoth kumarFirst Published Sep 11, 2018, 8:19 AM IST
Highlights

கல்விக்கு வயது ஒரு தடை அல்ல என்று நிருபித்திருக்குகிறார் கர்நாடகாவைச் சேர்ந்த 89 வயதாகும் முதியவர். இந்த முதியவர் பிஎச்டி படிப்பிற்கான தேர்வை அண்மையில் எழுதியுள்ளார்.

கல்விக்கு வயது ஒரு தடை அல்ல என்று நிருபித்திருக்குகிறார் கர்நாடகாவைச் சேர்ந்த 89 வயதாகும் முதியவர். இந்த முதியவர் பிஎச்டி படிப்பிற்கான தேர்வை அண்மையில் எழுதியுள்ளார். இவர் பெயர் ஷரணபசவராஜ் பிசரஹள்ளி. கர்நாடக மாநிலம் கொப்பல் பகுதியைச் சேர்ந்தவர். சுதந்திரத்திற்காக போராடியவர். மேலும் எழுத்தாளர், சமூக சேவகர் என பன்முகத் தன்மைக் கொண்ட இந்த முதியவர் 6 பிள்ளைகளுக்கு தந்தை ஆவார்.

 

1929-ம் ஆண்டில் பிறந்த இவர் தாயாரின் ஊக்குவிப்பால் கல்வியை சிறப்பாக பயின்றார். பிறகு ஆசிரியராக பணியில் சேர்ந்துள்ளார். திருமணத்துக்குப் பிறகு தனது 6 குழந்தைகளையும் நன்றாகப் படிக்க வைத்திருக்கிறார். இவரது மூத்த மகன் பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றிருக்கிறார். 2-வது மகன் பேராசிரியர், மூன்றாவது மகன் பிசினஸ் செய்கிறார். மேலும் ஒரு மகன் வெளிநாட்டில் வேலை செய்கிறார். மகள்கள் சுமங்கலா, அக்கம்மாதேவி ஆகிய இருவரும் பட்டப்படிப்பு முடித்துள்ளனர். 

கல்வி கற்பதிலும் கல்வி கற்க வைப்பதிலும் ஷரணபசவராஜுக்கு அதீத ஈடுபாடு கொண்டவர். கர்நாடகா பல்கலைக்கழகத்தில் இருந்து கன்னட பாடத்தில் பட்டம் பெற்றார். ஆனால் இவர் பிஎச்டி பயில கட் ஆஃப் மதிப்பெண் குறைவாக இருந்தது. அதனால் மீண்டும் அதே பாடத்தைப் பயின்று 66% பெற்றார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில் வாழ்வின் முழுவது ஒரு மாணவனாகவே இருக்கவே தான் விரும்புவதாகவும் கல்வி கற்பதற்கு எல்லை என்பதே இல்லை என்றும் இவர் தெரிவித்துள்ளார். சட்டம் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளில் இவர் ஏற்கனவே முதுகலை பட்டமும் பெற்றுள்ளார்.  ஷரணபசவராஜ் தற்போது பிஎச்டி தேர்வெழுதியுள்ளார்.

click me!