திருப்பதி ஏழு மலையானை தரிசிப்பதற்கு முன்பு, அவர் பக்கத்தில் உள்ள இவரை தான் முதலில் வணங்க வேண்டுமாம்..!

Published : Sep 10, 2018, 05:45 PM ISTUpdated : Sep 19, 2018, 09:22 AM IST
திருப்பதி  ஏழு மலையானை  தரிசிப்பதற்கு முன்பு,  அவர் பக்கத்தில் உள்ள  இவரை தான் முதலில் வணங்க வேண்டுமாம்..!

சுருக்கம்

திருப்பதி ஏழு மலையானை  தரிசிக்க செல்பவர்கள், முதலில் தரிசிக்க  வேண்டிய  கடவுள் அருள்மிகு வராக சுவாமியாம்.காரணம் என்னவென்றால் திருப்தியில் சீனிவாச பெருமாள் எழுந்தருள இவர் தான் இடம்  கொடுத்தவர். 

திருப்பதி ஏழு மலையானை தரிசிக்க செல்பவர்கள், முதலில் தரிசிக்க வேண்டிய கடவுள் அருள்மிகு வராக சுவாமியாம். காரணம் என்னவென்றால் திருப்தியில் சீனிவாச பெருமாள் எழுந்தருள  இவர் தான் இடம்  கொடுத்தவர்.

இந்த  ஒரு காரணத்திற்காக தான் , முதலில் வராக சுவாமிக்கு, பூஜை, நைவேத்தியம் முதல்  அனைத்து சிறப்பு  பூஜைகளும் செய்துவிட்டு, பின்னர் தான் ஏழுமலையானுக்கு  பூஜைகள் செய்யப்படுமாம்.


 இந்த சிறப்பு முறை தான் இன்று வரை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. திருப்பதிக்குச் செல்பவர்கள் முதலில் சுவாமி புஷ்கரணியில் நீராடி, ஶ்ரீவராகசுவாமியை வழிபட்ட பிறகுதான் வேங்கடேச பெருமாளை தரிசனம் செய்ய வேண்டும் என்பது ஐதீகம்.

வராக மூர்த்தி கோயில், திருக்குளத்துக்கு அருகில் அமைந்திருக்கிறது என்பது கூடுதல் தகவல் . 
எனவே இதுவரை நேரடியாக  திருப்பதி  சென்று  ஏழுமலையானை வழிப்பட்டவர்கள் இனி அருள்மிகு வராக சுவாமியை முதலில் தரிசனம் செய்து விட்டு செல்வது ஆக சிறந்தது. 

PREV
click me!

Recommended Stories

இந்தியா எங்களுக்கு இரண்டாவது வீடு! டெல்லியில் ஆப்கானிஸ்தான் அமைச்சர் உருக்கம்
நாட்டுக்கு ஒரு மோடி போதுமா? ஹனுமான்–ராமன் உதாரணம்… மோடி பற்றி ஜெய்சங்கர் ஓப்பன் டாக்