2ஜி மேல்முறையீட்டு வழக்கில் நாளை தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைமையிலான முதல் ஆட்சி காலத்தில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், திமுக எம்.பி.க்கள் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மீதும் மூன்று தனியார் நிறுவனங்கள் மீதும் சிபிஐ 2011ஆம் ஆண்டில் வழக்கு பதிவு செய்தது. அதேபோல், மத்திய அமலாக்கத் துறையும் தனியாக தொடர்ந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடந்தது.
டெல்லி சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் நடைபெற்று வந்த இந்த வழக்குகள் மீதான விசாரணையின் தீர்ப்பு கடந்த 2017ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. அதில், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவை டெல்லி உயர் நீதிமன்றத்தில் 2018ஆம் ஆண்டு மேல்முறையீடு செய்தது. சிபிஐ தரப்பு 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் தேதி முடிவடைந்தது. இதையடுத்து, எதிர்தரப்பினரின் வாதம் அதே ஆண்டு பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி தொடங்கியது. ஆனால், கொரோனா காரணமாக விசாரணையில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தினசரி விசாரணை நடைபெற்றது.
கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- மாவட்ட ஆட்சியர் உத்தரவு
இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், அனைத்து தரப்பினரும் அக்டோபர் 30ஆம் தேதிக்குள் (இன்று) எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, அனைத்து தரப்பும் எழுத்துப்பூர்வ வாதங்களை இன்று தாக்கல் செய்யவுள்ளது. அதன் தொடர்ச்சியாக, வழக்கு மீதான நாளை நடைபெறவுள்ளது. அப்போது, இந்த வழக்கில் தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.