தலைநகர் டெல்லியில் பயங்கர தீ விபத்து.. 10 கார்கள், 3 இரு சக்கர வாகனங்கள், 80 இ-ரிக்‌ஷாக்கள் எரிந்து நாசம்.!

Published : Jun 08, 2022, 01:21 PM IST
தலைநகர் டெல்லியில் பயங்கர தீ விபத்து.. 10 கார்கள், 3 இரு சக்கர வாகனங்கள், 80 இ-ரிக்‌ஷாக்கள் எரிந்து நாசம்.!

சுருக்கம்

டெல்லியில் வாகன நிறுத்தத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 10 கார்கள், 3 இரு சக்கர வாகனங்கள், 30 புதிய இ-ரிக்‌ஷாக்கள் எரிந்து சாம்பலாகின.

டெல்லியில் வாகன நிறுத்தத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 10 கார்கள், 3 இரு சக்கர வாகனங்கள், 30 புதிய இ-ரிக்‌ஷாக்கள் எரிந்து சாம்பலாகின. 

தலைநகர் டெல்லியில் ஜாமியா நகரில் இன்று காலை வாகனம் நிறுத்துமிடத்தில் திடீரென விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், ஏராளமான வாகனங்கள் கொழுந்துவிட்டு எரிய தொடங்கின. இதுதொடர்பாக உடனே தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த 7 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

இந்த தீ விபத்தில்  10 கார்கள், 3 இரு சக்கர வாகனங்கள், 30 புதிய இ-ரிக்‌ஷாக்கள், 50 பழைய இ-ரிக்ஷாக்கள் முழுவதும் எரிந்து நாசமாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தீ விபத்தில் அதிஷ்டவசமாக எந்த ஒரு உயிரிழப்புகளும் ஏற்படவில்லை. எப்படி தீ விபத்து ஏற்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

இனி UPSC தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ய முடியாது! வெறும் 10 செகண்ட்ல செக்கிங் ஓவர்!
பராசக்தியாக மாறிய பிரதமர் மோடி.. 72 மணி நேரம்.. ஆடிப்போன சந்நியாசிகள்! சர்ப்ரைஸ் மொமண்ட்!