ஏழைகளுக்கு மட்டும்னா ஓகே.. எல்லாருக்கும் இலவசமா செய்ய முடியாது.. சுப்ரீம் கோர்ட்டை நாடிய தனியார் மருத்துவர்கள்

By karthikeyan VFirst Published Apr 11, 2020, 3:03 PM IST
Highlights

கொரோனா பரிசோதனையை அரசு மற்றும் தனியார் ஆய்வகங்கள் அனைத்திலுமே இலவசமாக மேற்கொள்ள வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து டெல்லி மருத்துவர்கள் சிலர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், 7600 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்பு எண்ணிக்கை கடந்த 10 நாட்களில் மளமளவென உயர்ந்தாலும் கூட, இன்னும் இந்தியாவில் கொரோனா சமூக தொற்றாக பரவவில்லை. 

கொரோனா சமூக தொற்றாக பரவுவதை தடுக்க வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வராமல் தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துவருவதால் ஊரடங்கு நீட்டிக்கப்பட உள்ளது. 

ஊரடங்கு அமலில் உள்ளதால் வருவாயையும் வாழ்வாதாரத்தையும் இழந்து ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பரிசோதனைக்கு தனியார் பரிசோதனை மையங்களில் ரூ.4500 அல்லது அதற்கும் மேலாக கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஊரடங்கால் வருமானத்தை இழந்து மக்கள் கஷ்டப்பட்டுவரும் நிலையில், கொரோனா பரிசோதனைக்கும் கட்டணம் வாங்குவதால் கடும் சிரமத்துக்கு ஆளாகினார்கள்.

இந்நிலையில், இதுகுறித்த பொதுநல மனு மற்றும் கொரோனா தொடர்பான பல பொதுநல மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அந்த வழக்கை கடந்த 8ம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், அரசு மற்றும் தனியார் என எந்த பரிசோதனை ஆய்வகங்களாக இருந்தாலும் கொரோனா பரிசோதனைக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது. கட்டணம் வசூலிக்காமல் கொரோனா பரிசோதனையை இலவசமாக மேற்கொள்ள வேண்டும் என்ற அரசாணையை மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

இந்நிலையில், அந்த உத்தரவில் சில மாற்றங்களை கோரி டெல்லி தனியார் மருத்துவர்கள் சிலர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். தனியார் ஆய்வகங்களில் ஏழை மக்களுக்கு இலவசமாக பரிசோதனை எந்த பிரச்னையும் இல்லை. ஏழை மக்களுக்கு இலவசமாக பரிசோதனை செய்யலாம். ஆனால் அதற்கான தொகையை அரசு, தனியார் ஆய்வகங்களுக்கு செலுத்த வேண்டும். அதேநேரத்தில் ஏழைகளுக்கு மட்டும்தான் இலவச பரிசோதனை செய்யமுடியும். அனைவருக்கும் இலவசமாக பரிசோதனை செய்ய வேண்டும் என்பது சரியாக இருக்காது. எனவே அந்த உத்தரவில் ஒருசில மாற்றங்களை கோரி டெல்லியை சேர்ந்த தனியார் மருத்துவர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.
 

click me!