டெல்லி முதல்வராக பதவியேற்றார் ரேகா குப்தா! பிரதமர் மோடி பங்கேற்பு!

Published : Feb 20, 2025, 12:30 PM ISTUpdated : Feb 20, 2025, 12:58 PM IST
டெல்லி முதல்வராக பதவியேற்றார் ரேகா குப்தா! பிரதமர் மோடி பங்கேற்பு!

சுருக்கம்

டெல்லி முதல்வராக ரேகா குப்தா பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டனர். 

70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 5ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக 48  இடங்களில் வெற்றி பெற்று, சுமார் 27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. டெல்லியின் அடுத்த அடுத்த முதல்வர் யார்? என்ற கேள்வி தொடர்ந்து எழுந்த வந்த நிலையில், டெல்லியில் முதல் முறையாக எம்எல்ஏவாக தேர்வாகியுள்ள ரேகா குப்தா டெல்லி முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். 

வழக்கறிஞரான ரேகா குப்தா ஷாலிமார் பாக் தொகுதியிலிருந்து முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். இந்நிலையில் பாஜக மூத்த தலைவர்களை புறம்தள்ளி அவர் டெல்லியின் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் டெல்லியின் முதல்வராக  இன்று பதவியேற்றுக் கொண்டார்.

டெல்லி முதல்வராகும் ரேகா குப்தாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த பதவியேற்பு விழாவில் ரேகா குப்தா டெல்லியின் நான்காவது பெண் முதலமைச்சராக ரேகா குப்தா பதவியேற்றார். டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனா அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதனைத் தொடர்ந்து கட்சித் தலைவர்களான பர்வேஷ் வர்மா மற்றும் ஆஷிஷ் சூன் ஆகியோர் கேபினட் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.

இதனைத் தொடர்ந்து பாஜக தலைவர் மஞ்சிந்தர் சிங் சிர்சா கேபினட் அமைச்சராக பதவியேற்றார். அபோது கூட்டத்தில் இருந்தவர்கள் கூட்டம் 'பாரத் மாதா கீ ஜே என்ற கோஷங்களை எழுப்பினார்கள். இதனைத் தொடர்ந்து பாஜக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட ரவீந்தர் இந்திரஜ் சிங், பங்கஜ் குமார் சிங் மற்றும் கபில் மிஸ்ரா ஆகியோரும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். முதற்கட்டமாக மொத்தம் 6 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டுள்ளனர். 

டெல்லி முதல்வவரின் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். மேலும் அமித்ஷா, ஜேபி.நட்டா, தர்மேந்திர பிரதான்,  தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் பாஜகவின் மூத்த தலைவர்கள், தேசிய ஜனநாயக கூட்டணியின் மூத்த தலைவர்களான பவன் கல்யாண், அஜித் பவார்,ஏக்நாத் ஷிண்டே, சந்திரபாபு நாயுடு, பிரபுல் படேல், ஆகியோரும் கலந்து கொண்டனர். 

சுஷ்மா ஸ்வராஜ் முதல் ரேகா குப்தா வரை! டெல்லியை ஆட்சி செய்த பெண் முதல்வர்கள்!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!
புடின் விருந்தில் கலந்துகொள்ள சசி தரூருக்கு மட்டும் அழைப்பு! ராகுலுக்கு வெறுப்பேத்தும் பாஜக!