டெல்லி சென்றுள்ள தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்தார்.
எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் பாட்னாவிலும், இரண்டாவது கூட்டம் ஜூலை மாதம் பெங்களூருவிலும், மூன்றாவது கூட்டம் செப்டம்பர் மாதம் மும்பையிலும் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக, இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டம் டிசம்பர் 19ஆம் தேதி (inRu)டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்தியா கூட்டணிக் கட்சிகளின் 4வது ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் நேற்றிரவு டெல்லி சென்றுள்ளார். இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்தார். டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த முதல்வர் ஸ்டாலினை சந்திக்க அங்கு சென்ற கெஜ்ரிவாலை திமுக எம்.பி. டி.ஆர். பாலு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
குளிர்காலத்தில் வீடற்றவர்களின் மரணங்கள்: விசாரிக்க குழு அமைத்த டெல்லி அரசு!
அதன்பிறகு காவல்துறை மரியாதையை ஏற்றுக் கொண்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் கூட்டம் இன்னும் சில மணி நேரத்தில் நடைபெறவுள்ள நிலையில், இந்த சந்திப்பு நடந்துள்ளது. டெல்லி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.