டெல்லி எய்ம்ஸ் பயிற்சி மருத்துவர்கள் திடீர் போராட்டம்!

 
Published : Nov 24, 2016, 04:25 PM ISTUpdated : Sep 19, 2018, 02:04 AM IST
டெல்லி எய்ம்ஸ் பயிற்சி மருத்துவர்கள் திடீர் போராட்டம்!

சுருக்கம்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் தாக்கப்பட்டதைக்‍ கண்டித்து, அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று, நோயாளி ஒருவருக்கு சிகிச்சை அளிக்குமாறு அவரது உறவினர்கள் பயிற்சி மருத்துவர்களை வற்புறுத்தினர். இதற்கு பணியில் ஈடுபட்டிருந்த பயிற்சி மருத்துவர்கள் மறுத்த போது வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் உருவானது.

இதனால் ஆத்திரம் அடைந்த நோயாளியுடன் வந்த சிலர் பயிற்சி மருத்துவர்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்புப் பணியில் போதுமான பணியாளர்கள் இல்லாததால், இந்த தாக்‍குதலை தடுக்‍க இயலவில்லை என குற்றம்சாட்டியுள்ள பயிற்சி மருத்துவர்கள், பாதுகாப்பை பலப்படுத்துமாறு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

PREV
click me!

Recommended Stories

இளம் வயதினரிடையே திடீர் மரணம் அதிகரிப்பு.. கோவிட்-19 தடுப்பூசி தான் காரணமா?
ஒரே ஃபிரேம்ல ரெண்டு GOAT.. சச்சின் கையால் 'நம்பர் 10' ஜெர்சி வாங்கிய மெஸ்ஸி!