தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீவிபத்து : 2 பேர் பலி - 8 பேர் படுகாயம்!

 
Published : Nov 24, 2016, 04:06 PM ISTUpdated : Sep 19, 2018, 02:04 AM IST
தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீவிபத்து : 2 பேர் பலி - 8 பேர் படுகாயம்!

சுருக்கம்

குஜராத் மாநிலம், ஜாம்நகரில், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் நிகழ்ந்த தீ விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

குஜராத் மாநிலம் ஜாம்நகரில், தனியார் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்றில், பராமரிப்பு பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் உயரமான இடத்தில் பணியில் ஈடுபட்டிருந்த 2 தொழிலாளர்களில் ஒருவர் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மற்றொருவர் தீக்‍காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதையடுத்து, தீவிபத்து நிகழ்ந்த தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் மூடப்பட்டது. போலீசார் வழக்‍குப்பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

உக்ரைன் போர்.. ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்த 26 இந்தியர்கள் பலி; போர்முனையில் சிக்கியுள்ள 50 பேர்!
அநியாயம்! தட்டிக்கேட்ட பெண்ணை கொதிக்கும் எண்ணெயை ஊற்றி பொசுக்கிய கொடூரர்கள்!