உச்சநீதிமன்ற அடுத்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா - ஜே.எஸ்.கேஹர் பரிந்துரை!!

 
Published : Jul 26, 2017, 01:57 PM ISTUpdated : Sep 19, 2018, 12:56 AM IST
உச்சநீதிமன்ற அடுத்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா - ஜே.எஸ்.கேஹர் பரிந்துரை!!

சுருக்கம்

deepak mishra will be the supreme court chief justice

உச்சநீதிமன்ற அடுத்த தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா பெயரை, தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள ஜே.எஸ். கேஹர் பதவிக் காலம், அடுத்த மாதம் 27-ம் தேதி நிறைவடைகிறது. இதையடுத்து, புதிய தலைமை நீதிபதியை நியமனம் செய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. 



உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக யாரை நியமிக்கலாம் என, தற்போதைய தலைமை நீதிபதி கேஹரிடம் ஆலோசனை கேட்கப்பட்டது. அதற்கு அவர் தீபக் மிஸ்ரா பெயரை பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தற்போது 63 வயதாகும் தீபக் மிஸ்ரா, அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டால், 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை அவர் பதவி வகிப்பார்.

PREV
click me!

Recommended Stories

நண்பேண் டா..! இந்தியாவுக்காக உதவ மீண்டும் முன்வந்த புடின்..! ரஷ்யாயாவுடன் பிளாக்பஸ்டர் ஒப்பந்தம்..!
இந்திய எல்லைக்குள் ஊடுருவிய ஜெய்ஷ்-இ-முகமது பெண்..! பாகிஸ்தானை அம்பலப்படுத்தப்போகும் ஷாஹ்னாஸ் அக்தர்..!