ஜோஷிமத் ஏற்கெனவே அதன் தாங்கும் திறனை வெகுவாகத் தாண்டிவிட்டதாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
உத்தராகண்ட் மாநிலத்தின் ஜோஷிமத் நகரில் புதிதாக கட்டிடங்கள் கட்ட தடைவிதித்து, புதிய கட்டுமானங்களுக்கு இல்லாத மண்டலமாக அறிவிக்க வேண்டும் என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறியுள்ளது.
'பேரழிவுக்குப் பிந்தைய தேவைகள் மதிப்பீடு' (Post Disaster Need Assessment) என்ற தலைப்பில் தேசிய பேரிடர் மேலாண்டமை ஆணையம் வெளியிட்டுள்ள 130 பக்க அறிக்கையில் ஜோஷிமத் நகரம் தரையில் அழுந்திக்கொண்டே செல்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை ஜோஷிமத் நிலப்பகுதி குறித்து வெளியாகியுள்ள எட்டு அறிக்கைகளில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆய்வு அறிக்கையும் ஒரு முக்கிய அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. ஆனால், அந்த அறிக்கைகளை மாநில அரசு கடந்த பல மாதங்களாக பொதுவெளியில் பகிராமல் வைத்திருக்கிறது.
கந்துவட்டி கொடுமை! தலித் பெண்ணை நிர்வாணப்படுத்தி வாயில் சிறுநீர் கழித்த கும்பல்!
உத்தரகாண்ட் உயர் நீதிமன்றம் இந்த அறிக்கைகளை ரகசியமாக வைத்திருக்குப்பதற்காக மாநில அரசை கேள்விக்குட்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், அந்த அறிக்கைகளில் சில தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளன.
இந்த ஆண்டு ஜனவரியில், மத்திய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம், வாடியா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹிமாலயன் ஜியாலஜி, தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம், மத்திய நிலத்தடி நீர் வாரியம், இந்திய ரிமோட் சென்சிங் நிறுவனம், நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹைட்ராலஜி மற்றும் ஐஐடி ரூர்க்கி ஆகிய எட்டு நிறுவனங்கள் ஜோஷிமத் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் நிலச்சரிவு ஏற்படுவதற்கான காரணங்களைக் கண்டறியவும், நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பரிந்துரைகளை வழங்கியுள்ளன.
அவர்கள் ஜனவரி மாத இறுதியில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திடம் தங்கள் ஆரம்ப அறிக்கையை சமர்ப்பித்தனர். அறிக்கைகள் பின்னர் மாநில அரசாங்கத்துடன் பகிர்ந்து கொள்ளப்பட்டன, ஆனால் பொதுவெளியில் வெளியிடவில்லை. கடந்த வாரம் தான் உத்தரகாண்ட் உயர்நீதிமன்றத்தின் பரிசீலனைக்காக, அறிக்கைகளின் நகல்களை மாநில அரசு சீல் வைத்த கவரில் தாக்கல் செய்தது.
மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் முன்னணி ஆராய்ச்சி அமைப்புகளின் வல்லுநர்களால் உருவாக்கப்பட்ட இந்த அறிக்கைகளில் இடம்பெற்றுள்ள பரிந்துரைகளில், ஜோஷிமத் நகரத்தில் நிலப்பரப்பின் சுமை தாக்கும் திறன், மோசமான கட்டுமான வடிவமைப்பு ஆகியவை குறித்து கவனம் பேசப்பட்டுள்ளது. இந்த நகரத்தில் உள்ள கட்டிடங்கள் பல நிலச்சரிவுகளால் தேங்கிய மொரைன் அல்லது தளர்வான மண் மீது கட்டப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கிறது.
வீட்டுக்கடனில் பேலன்ஸ் ட்ரான்ஸ்ஃபர் செய்யலாமா? அதனால் மொத்த கடன் குறையுமா?
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அறிக்கையில், "ஜோஷிமத் ஏற்கெனவே அதன் தாங்கும் திறனை வெகுவாகத் தாண்டிவிட்டது. அந்தப் பகுதியை புதிய கட்டுமானம் இல்லாத பகுதியாக அறிவிக்க வேண்டும்" என்று பரிந்துரைத்துள்ளது.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஜோஷிமத்தின் மக்கள்தொகை 16,709 ஆக இருந்தது. மக்கள்தொகை நெருக்கம் ஒரு சதுர கிமீக்கு 1,454 ஆக இருந்தது. மாவட்ட நிர்வாகத்தின் தகவல்படி இப்போதைய மக்கள்தொகை 25,000 முதல் 26,000 வரை உள்ளது.
மத்திய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (CBRI) அதன் 180 பக்க அறிக்கையில், ஜோஷிமத்தில் தற்போதைய கட்டுமான நடைமுறைகளை கேள்விக்குள்ளாக்குகிறது. மலைப்பாங்கான பகுதிகளில் நகர திட்டமிடல் கொள்கைகளை மறுபரிசீலனை செய்யவும் பரிந்துரைத்துள்ளது.
இந்திய புவியியல் ஆய்வு (GSI) நிறுவனத்தின் அறிக்கையின்படி, ஜோஷிமத் நகரில் மக்கள்தொகை நெருக்கம் அதிகமாக உள்ள, பல மாடி கட்டிடங்கள் நிறைந்த பகுதிகளில் சமீபத்தில் ஏற்பட்ட நில விரிசல்கள் பெரிய அளவில் இருக்கின்றன. இதனால் மனோகர் பாக் மற்றும் சிங்தார் போன்ற பகுதிகளில் கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இச்சூழலில் மத்திய அரசு சமீபத்தில் ஜோஷிமத் மறுசீரமைப்புக்காக ரூ.1,465 கோடி நிதி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
தந்திரமாக லாபம் ஈட்டிய ரயில்வே; செய்த மாற்றம் இதுதான்; அள்ளியது கோடியில்!!