
செல்ஃபி மோகத்தால் கண்ட இடத்தில் நின்று அடிபட்டு உயிரிழப்போர் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம் வகிக்கிறதாம்.
செல்பி மோகம் பிடித்து ஆடாதவர்களே இல்லை. நின்றால் செல்பி. உட்கார்ந்தால் செல்பி. ஏன் தும்பினால் கூட செல்பி என்று இந்த செல்பி மோகம் பிடிக்காதவர்கள் மிக மிகக் குறைவே. இந்த செல்பி மோகம் தலைவர்களை, ஏன் இந்திய பிரதமரையே கூட விட்டுவைக்க வில்லை. போகும் இடமெல்லாம் செல்பி எடுத்து அப்லோட் செய்வதே ஒரு வேலையாகவும் வைத்திருப்பவர்களும் உண்டு.
2014 – 2016-ஆம் ஆண்டில் நடந்த செல்ஃபி மரணத்தை ஆராய்ந்ததில், 127 மரணங்களில் 76 பேர் இந்தியாவில் மரணித்திருப்பது தெரியவந்துள்ளது.
இந்தியாவை தொடர்ந்து ரஷ்யா 2-வது இடத்திலும், அமெரிக்கா மூன்றாவது இடத்திலும் உள்ளன. இந்தப் பட்டியலில் சீனா கடைசி இடத்தில் உள்ளது. சீனாவில் தான் ஃபேஸ்புக், கூகுள் போன்றவற்றிற்கு தடையாச்சே. அங்க செல்பி எடுத்து எங்க போடுவது. சீனாக்காரர்கள் உஷாராதான் இருக்காங்க.
செல்ஃபி எடுப்பதின் முக்கிய காரணமே சமூக வலைதளமான பேஸ்புக்கில் அதிக லைக் பெறனும் என்பதே. லைக் வாங்குவதை விட உயிர் முக்கியம் என்பது அத்தருணத்தில் அவர்களுக்கு தெரிவதில்லை. இப்போவாச்சி தெரிஞ்சிக்குங்க செல்பியை விட லைஃப் முக்கியம்.