மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு குட் நியூஸ்...வேரியபிள் அகவிலைப்படியும் உயர்வு!

By Narendran S  |  First Published Oct 6, 2022, 9:14 PM IST

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 


மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி இருந்த நிலையில் தற்போது வேரியபிள் அகவிலைப்படியையும் உயர்த்தியுள்ளது. 

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் அகவிலைப்படி 2 முறை உயர்த்தப்படும் என்கிற அடிப்படையில் ஜனவரி 1 ஆம் தேதியும் ஜூலை 1 ஆம் தேதியும் அகவிலைப்படி உயர்த்தப்படும். மேலும் அதற்கான அறிவிப்புகள் மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் வெளியாகும். இந்த நிலையில் தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க: பொருளாதாரத்தில் வலுவாக மீண்டு வரும் இந்தியா... உலக வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணர் கருத்து!!

தற்போது மத்திய அரசின் மற்ற ஊழியர்களுக்கு வழங்கப்படும் வேரியபிள் அகவிலைப்படியும் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி தற்போது உள்ள 34% அகவிலைப்படியை உயர்த்தியதை அடுத்து இனி 38% சதவிகிதமாக இருக்கும். இதன்மூலம் சுமார் 47 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்று கருதப்படுகிறது. இந்தப் புதிய அகவிலைப்படி உயர்வு ஜூலை 1 ஆம் தேதி முதல் கணக்கிடப்பட்டு ஊழியர்களுக்கு செலுத்தப்பட உள்ளது.

இதையும் படிங்க: மக்களுக்கு தொல்லைக்கொடுத்த இளைஞர்கள்… நூதன முறையில் தண்டித்த போலீஸார்… வீடியோ வைரல்!!

இந்த அகவிலைப்படி உயர்வால் மத்திய அரசுக்கு கூடுதலாக ஆண்டிற்கு 6,591.36 கோடி ரூபாய் செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு மத்திய அரசின் ஓய்வூதியத்தை பெற்று வரும் நபர்களுக்கும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் மத்திய அரசின் ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 31 சதவிகிதத்திலிருந்து 34 சதவிகிதமாக உயர்த்தி இருந்தது. அது தற்போது கூடுதலாக 4% உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!