பாகிஸ்தான் தீவிரவாதிகளிடம் இருந்து காஷ்மீர் மக்களை காப்பாற்றிய டிவி3 டகோட்டா VP 905 பரசுராமா… நினைவுகளை பகிர்ந்து கொண்ட எம்.கே.சந்திரசேகர்…

By Selvanayagam PFirst Published Oct 7, 2018, 9:21 AM IST
Highlights

பாஜக மாநிலங்களவை உறுப்பினர் ராஜிவ் சந்திர சேகர், தனது தந்தை எம்.கே. சந்திரசேகர் இந்திய விமானப் படையில் செய்த சேவையை நினைவு கூறும் வகையில் விமானப்படையில்  உள்ள விமானம் ஒன்றைப் பெற்று  அதைப் புதுப்பித்துளளார். அந்த விமானம்  முதன் முறையாக நாளை நடைபெறவுள்ள ஏர்ஃபோர்ஸ் விழாவில் பறக்க உள்ளது.

முற்றிலுமாக புதுப்பிக்கப்பட்ட டிவி3 டகோட்டா  VP 905 பரசுராமா என்ற அந்த விமானம்  இந்திய விமானப்படை நாளான நாளை வானில் பறக்கவிடப்படுகிறது. டகோட்டா. 1940 விண்ட்டேஜ் வகையைச் சேர்ந்த இந்த விமானத்துடன் மொத்தம் 28 விமானங்கள் இந்த ஏர்ஃபோர்ஸ் விழாவில் பங்கேற்கின்றன.

இந்த புதுப்பிக்கப்பட்ட டகோட்டா விமானம் நாளை முதன் முறையாக இந்த விழாவில் பறக்கவிடப்படவுள்ளது. இந்திய விமானப் படையின் அடையாளமாக கருதப்படும் டைகர் மோத் மற்றும் ஹார்வேர்ட் – விண்டேஜ் போன் விமானங்களும்  இந்த அணிவகுப்பில் பங்கேற்கின்றன. அத்துடன் டகோட்டா மற்றும் ALH  ஆகிய இரு விமானங்களும் இதில் பங்கேற்க உள்ளதாக கமாண்டர் சர்மா தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் தீவிரவாதிகளிடம் இருந்து ஜம்மு-காஷ்மீர் மக்களை காப்பாற்றிய தனது தந்தை  ஓய்வு பெற்ற ஏர் கமாடர் சந்திரசேகர் அவர்களின் நினைவாக பாஜக எம்.பி. ராஜிவ் சந்திரசேகர், இந்த  டகோட்டா விமானத்தைப் பெற்று  அதைப் புதுப்பித்துளளார்.

ராஜிவ் சந்திரசேகர் எம்.பி.யின் தந்தை ஓய்வு பெற்ற சந்திரசேகரிடம் இருந்து ,டகோட்டா டிசி-3 விபி 905 பரசுராமா  என்ற 1940 ஆவது ஆண்டு விண்டேஜ் வகையைச் சேர்ந்த  அந்த விமானத்தின் சாவியை ஹிண்டன் விழாவில்  மே 4 ஆம் தேதி ஏர்-மார்ஷல்  டோனா பெற்றுக் கொண்டார். முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட இந்த விமானம் உரிய முறையில் ஒப்படைக்கப்பட்டது.

இது குறித்து தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட எம்.கே,சந்திரசேகர், டகோட்டா விமானம், விமானப்படையில் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்திய ராணுவ வீரர்களுக்காக இந்த விமானம் செய்லபட்டு வந்தது. பின்னர் ஸ்ரீநகரில் பாகிஸ்தான் தீவிரவாதிகளிடமிருந்து காஷ்மீர்  மக்களை காப்பாற்றவும் இந்த விமானம் பயன்படுத்தப்பட்டது என கூறினார்.

இந்தியன் ஏர்ஃபோர்சில் இந்த டகோட்டா விமானம் இல்லாதிருந்தால்  1946 -47 ஆண்டுகளில ஏராளமான காஷ்மீர் மக்களை பாகிஸ்தான் தீவிரவாதிகளிடம் இருந்து காப்பாற்றி இருக்க முடியாது என்கிறார் எம்.கே.சந்திரசேகர்.

ஆறு ஆண்டுகளாக புதுப்பிக்கப்பட்ட இந்த டகோட்டா விமானம் தற்போது ஏர்ஃபோர் விழாவில் பங்கேற்க தயாராக உள்ளது. புதுப்பிக்கப்பட்ட இந்த விமானம்  7 நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்திய விமானப் படையில் GOONYEY  பறவை என்ற சிறப்பையும்  பெயர் பெற்றுள்ளது இந்த டகோட்டா விமானம் என்பது குறிப்பிடக்கது.

மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு , ராஜிவ் சந்திரசேகர் அண்மையில் எழுதியுள்ள கடிதத்தில், இந்திய தேசிய விமானப்படை தினத்தன்று இந்த டகோட்டா விமானத்தை பங்கேற்க அனுமதி தரும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

டகோட்டா டிசி-3 விபி 905 பரசுராமா என்ற விமானம் விரைவில் நாடு முழுவதும் பிரபலம் அடையும் என்பதில் சந்தேகம் இல்லை.

click me!