பட்டாசு வெடிக்கும் நேரம் அதிகரிப்பு...! உச்சநீதிமன்றம் உத்தரவு

By vinoth kumarFirst Published Oct 31, 2018, 12:50 PM IST
Highlights

தீபாவளி பண்டிகையின்போது இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அதிரடி தீர்ப்பு வழங்கியது.

யின்போது இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அதிரடி தீர்ப்பு வழங்கியது. மேலும் பட்டாசு விற்பனைக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. 

பட்டாசு வெடிப்பது தொடர்பான உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டது.மேலும் பட்டாசு வெடிக்க 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டதை மாற்றி, காலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. 

வழக்கு விசாரணையின் போது, தமிழகத்தில் மட்டும் காலை நேரத்திலும் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. மேலும் அதிகாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கி உள்ளது. அதே சமயம் நாடு முழுவதிலும் மொத்தம் 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்படும் என்று திட்டவட்டமாக கூறியிருந்தது. மேலும், தமிழகத்துக்கு ஏற்ற நேரத்தை நீங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் அது காலையோ அல்லது மாலையோ நீங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிட்டிருந்தது. 

இந்த நிலையில், தீபாவளி அன்று தமிழகத்தில் காலை 4 மணி முதல் 5 மணி வரையும், இரவு 9 மணியில் இருந்து 10 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. பட்டாசு வெடிக்க நாடு முழுவதும் தடை கோரிய மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தீபாவளி அன்று நாடு முழுவதும் மாலை 6 மணி முதல் 8 மணி வரை பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கியது. 

இதனை திருத்தி, காலை நேரத்தில் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்குமாறு தமிழக அரசு மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், 2 மணி நேரத்துக்குமேல், பட்டாசு வெடிக்க அனுமதிக்க முடியாது என்ற கூறியதுடன், தென் மாநிலங்களில் மட்டும் ஒரு மணி நேரமும், மாலையில் ஒரு மணி நேரமும் பட்டாசு வெடித்துக் கொள்ளலாம் என்றும் நேரத்தை நிர்ணயித்தள்ளது. 

உச்சநீதிமன்றத்தின் விதிகள் பின்பற்றப்படுகிறதா? என்பதை மாவட்ட ஆட்சியர்கள் முதல் வி.ஏ.ஓ. உள்ளிட்டோர் கண்காணிக்க வேண்டும் என்றும், விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பெசோ வழிகாட்டுதல்படி தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை இந்த ஆண்டு மட்டும் விற்கலாம் என்றும் அடுத்தாண்டு விற்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

click me!