டெல்லியில் 10 , 15, ஆண்டுகள் பழமையான டீசல், பெட்ரோல் வாகனங்களை இயக்க தடை… உச்சநீதிமன்றம் அதிரடி…

By Selvanayagam PFirst Published Oct 29, 2018, 8:30 PM IST
Highlights

டெல்லியில் அதிக பட்ச காற்று மாசு இருப்பதால் அதைக் குறைக்க பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வரும் நிலையில் 10 ஆண்டுகள் பழமை வாய்ந்த டீசல் வாகனங்களுக்கும், 15 ஆண்டுகள் பழமை வாயந்த பெட்ரோல் வண்டிகளுக்கும் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவிலேயே அதிகபட்ச காற்று மாசு உள்ள மாநிலம் டெல்லிதான். இங்கு அதிகபட்சமாக லட்சக்கணக்கான  வாகனங்கள் உள்ளன, இதனால் காற்றின் மாசு அதிகரிக்கும் நகராக டெல்லி மாறி வருகிறது.

இதற்கு பழைய வாகனங்களும் ஒரு காரணம் என உச்சநீதிமின்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. பழைய வாகனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என  அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் 10 ஆண்டுகள் பழமை வாய்ந்த டீசல் வாகனங்களுக்கும், 15 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெட்ரோல் வானங்களுக்கும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து 10 மற்றும் 15 ஆண்டுகள் பழடை வாய்ந்த வாகனங்கள் இனி டெல்லி  வீதிகளில் பார்க்க முடியாது.

click me!