
மும்முறை தலாக் சொல்லும் முறையை ஒழிக்க வேண்டும் என இந்தியாவின் பல்வேறு நீதிமன்றங்களில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டிருக்கின்றன.
இஸ்லாமிய பெண்கள் அமைப்பு சார்பில் தொடரப்பட்ட இந்த வழக்கு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது இது குறித்து கருத்து சொன்ன நீதிபதிகள் மும்முறை தலாக் சொல்லும் நடைமுறை சட்டவிரோதம் என்றும் இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும் தெரிவித்தனர்.
அரசியல் சாசனமே உயர்ந்தது என்றும் தனி நபர் சட்ட வாரியம் உயர்ந்தது இல்லை என்றும் கருத்து தெரிவித்தனர்.
முத்தலாக் முறை இஸ்லாமிய பெண்களின் உரிமைகளை பறிப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.இதனையடுத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய சட்டத்தில் தலையிடுவதற்கு நீதிமன்றங்களுக்கு உரிமையில்லை என தனி நபர் சட்ட வாரியம் போராடி வரும் நிலையில் நீதிபதிகளின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.