தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை சோதனைக்கு அனுமதி... இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அறிவிப்பு..!

By vinoth kumarFirst Published May 8, 2020, 5:15 PM IST
Highlights

நாடு முழுவதும் 21 மருத்துவமனைகளில் பிளாஸ்மா சிகிச்சை மூலம் பரிசோதனை செய்யும் முயற்சிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அனுமதி வழங்கியுள்ளது. 

நாடு முழுவதும் 21 மருத்துவமனைகளில் பிளாஸ்மா சிகிச்சை மூலம் பரிசோதனை செய்யும் முயற்சிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அனுமதி வழங்கியுள்ளது. 

கொரோனாவில் இருந்து மீண்ட ஒருவரின் ரத்தத்தில் இருந்து பிளாஸ்மா பிரித்தெடுக்கப்பட்டு கொரோனாவால்  பாதிக்கப்பட்ட ஒருவரின் உடலில் செலுத்துவது தான் இந்த சிகிச்சையாகும். இதன்மூலம் கொரோனாவில் இரு்து மீண்டவர்கள் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டு வர உதவும். சில மாநிலங்களில் இந்த சிகிச்சை சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிளாஸ்மா சிகிச்சை முறை நல்ல பலன் அளிக்கிறது என்று டெல்லி முதல்வர் அர்விந்த்  கெஜ்ரிவால் உள்ளிட்ட  பல்வேறு மாநில முதல்வர்களும் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து,  தமிழகம் உட்பட சில மாநிலங்கள் இந்த சிகிச்சைக்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடம் அனுமதி கோரியிருந்தது. 

இந்நிலையில், கொரோனா சிகிச்சைக்கு சோதனை முறையில் பிளாஸ்மா சிகிச்சை அளிக்க  இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது. நாடு முழுவதும் உள்ள 21 மருத்துவமனைகளில் பிளாஸ்மா சிகிச்சை அளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தில் சென்னை, மதுரை, நெல்லை, வேலூரில்  பிளாஸ்மா சிகிச்சை சோதனை செய்யலாம் என கூறப்பட்டுள்ளது. 

click me!