கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்..! பாகிஸ்தானுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த இந்தியா..!

By Manikandan S R SFirst Published May 8, 2020, 2:13 PM IST
Highlights

காஷ்மீர் எல்லையில் பயங்கரவாத செயலுக்காக சிலரை ஊடுருவ விடும் பணியை பாகிஸ்தான் செய்து வருகிறது. அதை அந்நாடு நிறுத்திக் கொள்ளாவிட்டால் இந்தியா மிகத் தீவிரமான வகையில் பதிலடி கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்படும். 


காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் இருக்கும் ஹந்த்வாரா பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் ஊடுருவி அங்கு வசிக்கும் மக்களை பிணைக்கைதிகளாக பிடித்திருப்பதாக இந்திய பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தீவிர சோதனை வேட்டையில் இறங்கிய இந்திய ராணுவம், மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் காஷ்மீர் காவல்துறையின் சிறப்பு நடவடிக்கை குழு ஆகியவை பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச்சூடு நடத்தி பிணைக்கைதிகளை மீட்டனர். பயங்கரவாதிகளுடன் கடுமையாக நடைபெற்று வரும் சண்டையில் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் உட்பட 5 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். பதிலடியாக தீவிரவாதிகள் 4 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

உலகமெங்கும் கொரோனா நோய் கோர தாண்டவம் ஆடி வரும் நிலையில் காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தானிலிருந்து பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தும் சம்பவம் இந்தியாவில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இச்சம்பவத்திற்கு பாகிஸ்தான் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று இந்திய ராணுவ தளபதி தளபதி மனோஜ் முகுந்த் நரவனே எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக கூறியிருக்கும், அவர் பாகிஸ்தானின் அனைத்து அத்துமீறல்களும் பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் போக்கிற்கும் இந்திய ராணுவம் உரிய பதிலடி கொடுக்கும். காஷ்மீர் எல்லையில் பயங்கரவாத செயலுக்காக சிலரை ஊடுருவ விடும் பணியை பாகிஸ்தான் செய்து வருகிறது.

அதை அந்நாடு நிறுத்திக் கொள்ளாவிட்டால் இந்தியா மிகத் தீவிரமான வகையில் பதிலடி கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்படும். எல்லைப் பகுதியில் அமைதியை நிலைநாட்டும் பொறுப்பு பாகிஸ்தானுக்கு இருக்கிறது. கொரோனா வைரஸால் பாகிஸ்தான் மக்கள் அவதிக்குள்ளாகி இருக்கும் நிலையில் நோய் தொற்றுக்கு எதிரான போரத் தொடுக்காமல் பயங்கரவாதிகளை இந்திய எல்லைக்குள் அனுப்பி தீவிரவாத செயலை ஊக்குவிப்பது பாகிஸ்தான் தன் நாட்டு மக்கள் மீது வைத்திருக்கும் அக்கறை இன்மையையே காட்டுகிறது. இதுபோன்ற நேரத்தில் பயங்கரவாத செயலை ஊக்குவிப்பது பாகிஸ்தானின் மன நிலையை எடுத்து விளக்குகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

click me!