கொரோனா பிடியில் இந்தியா... தடுப்பு நடவடிக்கை என்ன..? மக்களிடம் மீண்டும் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி..!

By vinoth kumarFirst Published Mar 24, 2020, 12:49 PM IST
Highlights

நாடு முழுவதும் கொரோனாவை தடுக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு மீண்டும் நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார். அப்போது கொரோனா குறித்து சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில்;- கொரோனா அச்சுறுத்தல் தொடர்பாக இன்று, இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளேன் என பதிவிட்டுள்ளார்.
 

கொரோனா பீதியால் நிலைகுலைந்து போய் உள்ள இந்திய மக்களிடையே இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி மீண்டும் உரையாற்ற உள்ளார். 

கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு இந்தியாவில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 492 நபர்களுக்கு  பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் முடக்கப்பட்டுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என கேட்டு கொண்டார். மேலும், 22-ம் தேதி சுய ஊரடங்கை கடைபிடிக்க  மக்கள் வேண்டும் என கேட்டு கொண்டார். யாரும் தேவையில்லாமல் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியிருந்தார்.

ஆனால், நாடு முழுவதும் சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டாலும் சில இடங்களில் மக்கள் விழிப்புணர்வு இல்லாமல் கூட்டம் கூட்டமாக சென்ற வண்ணம் இருந்தனர். இது தனக்கு கவலை அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.  

இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனாவை தடுக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு மீண்டும் நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார். அப்போது கொரோனா குறித்து சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில்;- கொரோனா அச்சுறுத்தல் தொடர்பாக இன்று, இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளேன் என பதிவிட்டுள்ளார்.

click me!