சமூக விலகலை உறுதி செய்ய பெங்களூரு போலீஸின் கிரியேட்டிவான ஐடியா

By karthikeyan VFirst Published Mar 24, 2020, 12:04 PM IST
Highlights

கொரோனாவிலிருந்து தப்பிக்க, சமூக விலகலை பெங்களூரு தெற்கு காவல்துறையினர் சமயோசித செயல்பாட்டின் மூலம் உறுதி செய்துள்ளனர்.
 

சீனாவில் உருவான கொரோனா வைரஸ், உலகம் முழுதும் பரவி சர்வதேசத்தையே அச்சுறுத்திவருகிறது. கொரோனாவை தடுப்பதற்கான மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படாததால், இந்த கொடூரமான வைரஸ் மென்மேலும் பரவாத வகையில் தற்காத்துக்கொள்வதே கொரோனாவிலிருந்து விடுபடுவதற்கான வழி. 

அதனால், மக்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தியுள்ளதோடு, 144 தடை, லாக்டவுன் ஆகிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகிவருகிறது. கொரோனா பாதிப்பு 500ஐ நெருங்கிவிட்டது. கொரோனாவிற்கு பலியானோரின் எண்ணிக்கை இந்தியாவில் 9ஆக உயர்ந்துள்ளது. அதேவேளையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட 37 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள தனிமைப்பட வேண்டும். எனவே மக்கள் தனிமைப்படுத்தி கொள்வதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்திவருகின்றன. 

இந்தியாவில் மொத்தமாக 548 மாவட்டங்கள் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளன. அனைத்து மாநிலங்களின் எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இன்று மாலையுடன் அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படுகின்றன.

இவ்வாறாக பொதுமக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கியிருந்தாலும், மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள், காவல்துறையினர் ஆகியோர் தன்னலமின்றி மக்கள் பணியாற்றிவருகின்றனர்.

மருத்துவர்களும் செவிலியர்களும் சிகிச்சையளிப்பதால் அவர்களால் அவர்களை தனிமைப்படுத்தி கொள்ள முடியாது. ஆனால் காவல்நிலையங்களில் போலீஸார் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள முடியும். 

அந்தவகையில் பெங்களூரு தெற்கு துணை கமிஷனர் இஷா பண்ட் தலைமையிலான போலீஸார், காவல் நிலையத்தில் இருந்து பணியாற்றினாலும் சமூக விலகலை உறுதிப்படுத்தும் விதமாக, ஒவ்வொரு அதிகாரியின் டேபிளை சுற்றியும் பூந்தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

அதனால் அந்த பூந்தொட்டியை மீறி யாரும் குறிப்பிட்ட போலீஸ் அதிகாரிகளை நெருங்க முடியாது. அரசின் உத்தரவுகளையும் வழிகாட்டுதல்களையும் பின்பற்றுவதை உறுதி செய்யும் விதமாக இந்த செயல் அமைந்துள்ளது. 

click me!