கொடூரமாக பரவும் கொரோனா... இந்தியாவில் 4 லட்சத்தை கடந்த தொற்று... படுவேகத்தில் பரவுவதால் பீதி!

By Asianet TamilFirst Published Jun 20, 2020, 9:41 PM IST
Highlights

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தொட 78 நாட்கள் ஆனது. அடுத்த இரண்டு லட்சத்தை 15 நாட்களில் எட்டிய இந்தியா, மூன்று லட்சத்தை 12 நாட்களிலும், தற்போது 4 லட்சத்தை 10 நாட்களிலும் இந்தியா எட்டியுள்ளது. எனவே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுவோர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. 

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சமாக அதிகரித்துள்ளது.


இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று வேகம் பிடித்துள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இன்று இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்தைக் கடந்தது. தற்போதைய நிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,00,724-ஆக உள்ளது. இது நாள் வரை இந்தியாவில் கொரோனாவால் 13,100 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த ஜனவரி 30ம் தேதி இந்தியாவில் முதல் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. அதன் பிறகு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தொட 78 நாட்கள் ஆனது. அடுத்த இரண்டு லட்சத்தை 15 நாட்களில் எட்டிய இந்தியா, மூன்று லட்சத்தை 12 நாட்களிலும், தற்போது 4 லட்சத்தை 10 நாட்களிலும் இந்தியா எட்டியுள்ளது. எனவே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுவோர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. எனவே, வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை இன்னும் வேகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் மத்தியில் பீதி இன்னும் அதிகரித்துள்ளது.
4 லட்சத்துக்கு மேற்பட்டோர் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 2.16 லட்சம் பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸிலிருந்து மீள்வோர் எண்ணிக்கை 54 சதவீத்மாக அதிகரித்துள்ளது.

click me!