கோரதாண்டவம் ஆடும் கொரோனா... இன்று முதல் ஆளுநர் பிறப்பித்த அதிரடி உத்தரவு அமல்...!

By Kanimozhi PannerselvamFirst Published Apr 5, 2021, 10:01 AM IST
Highlights

9-ம் வகுப்புக்கான பாடவகுப்புகள் 2 வாரங்களும், 10, 11, 12-ம் வகுப்புக்கான பாட வகுப்புகள் ஒரு வாரத்துக்கும் மூடப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து558 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 24 லட்சத்து 85 ஆயிரத்து 509லிருந்து ஒரு கோடியே 25 லட்சத்து 89 ஆயிரத்து 067 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் இந்தியா முழுவதும் 478 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில், மரணமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 101 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 8.39 லட்சம் கொரோனா மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

மகாராஷ்ட்டிரா, குஜராத், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களைப் போலவே காஷ்மீரிலும் கடந்த சில நாட்களாக  கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வந்தது. தீயாய் பரவி வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி  முதற்கட்டமாக பள்ளிகளை மூட ஆளுநர் மனோஜ் சின்கா உத்தரவிட்டுள்ளார். 

அதன்படி 9-ம் வகுப்புக்கான பாடவகுப்புகள் 2 வாரங்களும், 10, 11, 12-ம் வகுப்புக்கான பாட வகுப்புகள் ஒரு வாரத்துக்கும் மூடப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்று முதல் இந்த உத்தரவு அமலுக்கு வரும் நிலையில், 200க்கும் மேற்பட்டோர் சமூக நிகழ்வுகள், கூட்டங்களில் பங்கேற்க அனுமதியில்லை என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனாவின் தாக்கம் அதிகரிக்க ஆரம்பித்துள்ள நிலையில் பல்வேறு மாநிலங்கள் பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

click me!