கொரோனா பாதிப்பில் முச்சதமடித்த மகாராஷ்டிரா.. 3ம் இடத்தில் தமிழ்நாடு.. மாநில வாரியாக முழு விவரம்

By karthikeyan VFirst Published Apr 1, 2020, 3:06 PM IST
Highlights

இந்தியாவில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 1700ஐ கடந்துவிட்டது. மகாராஷ்டிரா, கேரளாவிற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 
 

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்தியாவில் 1700க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கொரோனா சமூக தொற்றாக பரவாமல் தடுக்க ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதற்கிடையே, டெல்லியில் நடந்த தப்ளிக் ஜமாஅத் கூட்டத்தில் கலந்துகொண்டு சொந்த மாநிலங்களுக்கு திரும்பியவர்களில் பெரும்பாலானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டிலிருந்து அந்த கூட்டத்தில் கலந்துகொண்டவர்களிடமிருந்து இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட இந்தியர்களுக்கு பரவியுள்ளது. 

அவர்களால் தான் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்து வருகிறது. எனினும் கொரோனாவை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. அந்த கூட்டத்தில் கலந்துகொண்டு சொந்த மாநிலங்களுக்கு திரும்பியவர்களை கண்டுபிடித்து, அவர்களை பரிசோதிப்பதுடன், அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களை தனிமைப்படுத்தும் பணிகளை அனைத்து மாநில அரசுகளும் மேற்கொண்டு வருகின்றன.

கொரோனா பாதிப்பு மகாராஷ்டிராவில் உச்சத்தில் உள்ளது. அதிகபட்சமாக அந்த மாநிலத்தில் 300க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் 200க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் 124 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு அடுத்து மூன்றாமிடத்தில் தமிழ்நாடு உள்ளது. கர்நாடகா மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களும் கொரோனா பாதிப்பில் சதமடித்துவிட்டன. 

மாநில வாரியாக கொரோனா பாதிப்பின் விவரத்தை பார்ப்போம். 

மகாராஷ்டிரா - 320 

கேரளா - 241

கர்நாடகா - 101

தமிழ்நாடு- 124

ராஜஸ்தான்  - 93

குஜராத் - 82

உத்தர பிரதேசம் - 103

ஜம்மு காஷ்மீர் - 55

தெலுங்கானா - 94

லடாக் - 13

ஹரியானா- 43

ஆந்திரா - 87

மத்திய பிரதேசம் - 86

மேற்கு வங்கம் - 27

பீகார் - 23

கோவா - 6

புதுச்சேரி - 3

அந்தமான் நிகோபார் - 10.
 

click me!