இந்தியாவில் கடந்த 3 தினங்களாக 10 ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், தற்போது மீண்டும் 10542 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மீண்டும் அதிகரித்த கொரோனா
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக பல லட்சம் மக்கள் உயிர் இழந்தனர். மேலும் வீடுகளுக்குள் சுமார் 2 வருடங்கள் முடங்கி கிடந்தனர். இதனையடுத்து கொரோனா தடுப்பூசி காரணமாக கொரோனா தொற்று குறைந்து மீண்டும் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். இந்தநிலையில் மீண்டும் பொதுமக்கள் அச்சம் அடைய வைக்கும் நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் கொரோனா பாதிப்பு 500க்கும் கீழ் இருந்த நிலையில் தற்போது 10 ஆயிரத்தை கடந்துள்ளது. இதன் காரணமாக மத்திய அரசு மாநிலங்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளது. டெல்லி, கேரளா, மஹாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது.
38 பேர் கொரோனா பாதிப்பால் பலி
கடந்த இரண்டு தினங்களாக 9111 மற்றும் 7633 என பாதிப்பு விகிதம் இருந்த நிலையில் இன்று மீண்டும் 10 ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 10542 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 61,233 லிருந்து 63,562 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு மேலும் 38 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தை பொறுத்த வரை ஒரே நாளில் 527 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆண்கள் 302 பேர், பெண்கள்225 பேர் அடங்குவர். அதிகபட்சமாக சென்னையில் 130 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு விகிதம் கடந்த 3 தினங்களாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்தது பொதுமக்களை அச்சம் அடையவைத்துள்ளது.
இதையும் படியுங்கள்
பாமகவின் கனவு நிறைவேறியது.! தமிழில் மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகள் - ராமதாஸ் மகிழ்ச்சி