இந்தியாவில் 1000ஐ கடந்த கொரோனா பாதிப்பு.. மாநில வாரியாக முழு விவரம்

By karthikeyan VFirst Published Mar 29, 2020, 4:35 PM IST
Highlights

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1000ஐ கடந்துவிட்டது. 29 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.
 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனா இந்தியாவில் சமூக தொற்றாக பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.

ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்கள் சமூக விலகலை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு உறுதியானவர்களுக்கு, மருத்துவமனைகளில் கொரோனா சிறப்பு வார்டுகளை அமைத்து சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது.

மத்திய, மாநில அரசுகள் கொரோனாவை தடுக்க நடவடிக்கைகளை முடுக்கிவிட்டாலும், தொடர்ச்சியாக கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. நேற்று ஒரே நாளில் 179 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது உறுதியானது. இன்றும் கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1000ஐ கடந்துவிட்டது. 

மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகபட்சமாக 193 பேரும் கேரளாவில் 176 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாநிலங்களுக்கு அடுத்தபடியாக கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. கர்நாடகாவில் 77 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் 42 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 1020 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாநில வாரியாக பாதிப்பு விவரம்:

மகாராஷ்டிரா - 193 

கேரளா - 176

கர்நாடகா - 77

தமிழ்நாடு- 42

ராஜஸ்தான்  - 57

குஜராத் - 58

உத்தர பிரதேசம் - 61

ஜம்மு காஷ்மீர் - 38

தெலுங்கானா - 65

லடாக் - 13

ஹரியானா- 21

ஆந்திரா - 19

மத்திய பிரதேசம் - 39

மேற்கு வங்கம் - 18

கோவா - 6

புதுச்சேரி, மணிப்பூர், மிசோரம் - 1.
 

click me!