India Corona: 3 வது நாளாக குறைந்த பாதிப்பு.. இன்று ஒரே நாளில் 16,464 பேருக்கு கொரோனா.. 39 பேர் பலி..

Published : Aug 01, 2022, 10:18 AM IST
India Corona: 3 வது நாளாக குறைந்த பாதிப்பு.. இன்று ஒரே நாளில் 16,464 பேருக்கு கொரோனா.. 39 பேர் பலி..

சுருக்கம்

India corona : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 16,464 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் புதிதாக 39 பேர் உயிரிழந்துள்ளனர்.  

இதுக்குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 16,464 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. நேற்று முன்தினம் 20,408 ஆகவும் நேற்று 19,637 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 16,464 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,40,36,275 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும் படிக்க:குறைந்த கொரோனா.. இன்று ஒரே நாளில் 19,637 பேருக்கு பாதிப்பு.. 45 பேர் பலி

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றிலிருந்து 16,112 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் இதுவரை கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,33,65,890 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்போர் எண்ணிக்கை 1,43,989 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 39 பேர் உயிரிழந்துள்ளனர். 

மேலும் படிக்க:தமிழகத்தில் சரிந்தது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை… சென்னையிலும் குறைகிறது தொற்று!!

நாட்டில் இதுவரை கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை  5,26,396 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் கொரோனா உயிரிழப்பின் விகிதம் 1.20 % ஆக உள்ளது. அதே போல் சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.33 % ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 98.48 % ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 204.34 கோடிக்கு அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரே நாளில் 8,34,167 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

EPFO சம்பள வரம்பு உயர்வால் கைக்கு வரும் சம்பளம் குறையுமா? ஊழியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முழு விவரம்!
Longest Train Journeys In India: 3 பகல், 3 இரவு... இந்தியாவையே கடக்கும் ரயில் பயணம்! 75 மணி நேரம் தொடரும் பிரம்மாண்ட Train Travel.!