கோரமண்டல் விரைவு ரயிலின் எஞ்சின் மற்றும் 11 பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாக அவை எந்தெந்த பெட்டிகள் என்ற விவரத்தை ரயில்வே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கோரமண்டல் விரைவு ரயிலின் எஞ்சின் மற்றும் 11 பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாக அவை எந்தெந்த பெட்டிகள் என்ற விவரத்தை ரயில்வே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில், ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹானாகா ரயில் நிலையம் அருகே எதிர்பாராதவிதமாக தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கோரமண்டல் விரைவு ரயில் பெட்டிகள் அருகில் இருந்த தண்டவாளத்தில் சரிந்துள்ளது.
அப்போது பெங்களூருவில் இருந்து கொல்கத்தா நோக்கி சென்றுகொண்டிருந்த யஸ்வந்த்பூர் ஹவுரா விரைவு ரயில், தடம் புரண்ட ரயில் பெட்டிகள் மீது மோதி அந்த ரயிலும் விபத்துக்குள்ளானது. மேலும், சரக்கு ரயிலும் இந்த விபத்தில் சிக்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. இந்த விபத்தில் பல பயணிகள் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.
உடனே விபத்து நடந்த பகுதியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். தற்போது வரை 207 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், கோரமண்டல் விரைவு ரயிலின் எஞ்சின் மற்றும் 11 வெட்டிகள் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவை A1, A2, H1, B2, B3, B5,B6, B7, B8, B9 ஆகிய வெட்டிகள் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.