ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹானாகா ரயில் நிலையம் அருகே எதிர்பாராதவிதமாக கோரமண்டல் விரைவு ரயில், யஸ்வந்த்பூர் ஹவுரா விரைவு ரயில், சரக்கு ரயில் விபத்துக்குள்ளானது.
ஒடிசா ரயில் விபத்து காரணமாக பாலசோர் வழித்தடத்தில் இயக்கக்கூடிய 43 ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹானாகா ரயில் நிலையம் அருகே எதிர்பாராதவிதமாக கோரமண்டல் விரைவு ரயில், யஸ்வந்த்பூர் ஹவுரா விரைவு ரயில், சரக்கு ரயில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 233ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்தேதார் எண்ணிக்கை 1000ஐ தாண்டியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ஒடிசா ரயில் விபத்து எதிரொலியாக இதுவரை 43 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. விபத்துக்குப் பிறகு 38 ரயில்கள் திருப்பி விடப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் இன்று வரை தமிழகத்தில் இருந்து 7 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து காலை 7 மணிக்கு புறப்பட வேண்டிய கோரமண்டல் ரயில் ரத்தால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
முன்பதிவு செய்த பயணிகளுக்கு கட்டணம் முழுமையாக திருப்பி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு கவுண்டர்கள் அமைத்து கட்டணத்தை திருப்பி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்து இருப்பதால் நேரடியாக வங்கி கணக்கிற்கு கட்டண தொகை திரும்ப வழங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.