சென்னை சென்ட்ரல் மெயில் உட்பட 7 ரயில்கள் ரத்து.. திருப்பி விடப்பட்ட 5 ரயில்கள் - முழு பட்டியல் இதோ

By Raghupati RFirst Published Jun 2, 2023, 11:44 PM IST
Highlights

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து காரணமாக ஏழு பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு, மற்றவை திருப்பி விடப்பட்டன. அவற்றின் முழுமையான பட்டியலை இங்கு காணலாம்.

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலத்தின் பாலாசூர் மாவட்டம் அருகே வெள்ளிக்கிழமை இரவு சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. ஒடிசாவின் பாஹா நாகா பஜார் ரயில் நிலையம் அருகே ரயில்கள் மோதிய இந்த விபத்தில் பயணிகள் பலரும் சிக்கியுள்ளனர்.

50 பேர் உயிரிழந்துள்ளனர். 350க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் மற்றும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ஆகிய இரண்டு ரயில்களும் பக்கவாட்டில் ஒன்றையொன்று தொட்டு, மோதியதில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது. அருகில் உள்ள தண்டவாளத்தில் சென்று கொண்டு இருந்த சரக்கு ரயிலின் மீது மோதியது.இந்த சம்பவத்தில் யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரஸின் 4 பெட்டிகளும் தடம் புரண்டன என்றும் கூறப்படுகிறது.

ரத்து செய்யப்பட்ட ரயில்கள்:

ஏழு ரயில்கள், அதாவது ஹவுரா - பூரி சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் (12837), ஹவுரா - SMVT பெங்களூரு SF எக்ஸ்பிரஸ் (12863), ஹவுரா - MGR சென்னை சென்ட்ரல் மெயில் (12839), ஷாலிமார் - பூரி வாராந்திர SF எக்ஸ்பிரஸ் (12895), மஹிமா கோசைன் எக்ஸ்பிரஸ் (20831) , சந்த்ராகாச்சி - பூரி சிறப்பு (02837), சீல்டா - பூரி துரந்தோ எக்ஸ்பிரஸ் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

திருப்பி விடப்பட்ட ரயில்கள்:

எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் AC SF எக்ஸ்பிரஸ் (22807), விசாகப்பட்டினம் SF எக்ஸ்பிரஸ் (22873), ஸ்ரீ ஜெகநாத் எக்ஸ்பிரஸ் (18409), மைசூர் வாராந்திர SF எக்ஸ்பிரஸ் (22817) ஆகியவை டாடாநகர் சந்திப்பு ரயில் நிலையம் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. மேலும், நியூ டின்சுகியா எக்ஸ்பிரஸ் (15929) மீண்டும் பத்ரக் ரயில் நிலையத்திற்கு திருப்பி வரவழைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..Coromandel Train Accident : கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் 50 பேர் உயிரிழப்பு; 300 பேர் காயம்!!

இதையும் படிங்க..ஒரே பாதையில் வந்த ரயில்கள்.. சிக்னல் பிரச்னை.! கோரமண்டல் ரயில் விபத்தில் நடந்தது என்ன?

click me!