உயர..உயர பறக்கும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை…. நள்ளிரவு முதல் விலை உயர்த்தப்பட்டது !!

 
Published : Aug 01, 2018, 07:29 AM ISTUpdated : Sep 19, 2018, 02:47 AM IST
உயர..உயர பறக்கும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை…. நள்ளிரவு முதல் விலை உயர்த்தப்பட்டது !!

சுருக்கம்

cooking cylinder price hike from midnight

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1 ரூபாய் 76 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

ஒவ்வொரு வீட்டிலும் சமையல் எரிவாயு சிலிண்டர்  என்பது அத்தியாவசியத் தேவையாகி வருகிறது. தற்போது சிறு குடிசைகள் முதல் பெரிய வீடுகள், கடைகள், ஹோட்டல்கள் என அனைத்துத் தரப்பினரும் சிலிண்டர்கள் பயன்படுத்தி வருகின்றனர். சிலிண்டர்களின் விலையை சர்வதேச சந்தையை மையப்படுத்தி எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.



அதே நேரத்தில் மாதந்தோறும், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி வருகின்றன. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை போன்றவற்றை அடிப்படையாக கொண்டு விலை நிர்ணையிக்கப்பட்டு வருகிறது.



கடந்த மாதம் ஜூன் 30-ம் தேதி நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 2 ரூபாய் வரை உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், இன்று சமையல் எரிவாயுவின் விலை 1 ரூபாய் 76 காசு உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு  நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

PREV
click me!

Recommended Stories

தாய் தந்தையைக் கொன்று ரம்பத்தால் துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய மகன்!
இந்தியாவுக்கு எதிராக சதி... ஒரே அடியில் பாடம் கற்றுக்கொடுக்கணும்..! யூனுஸ் அரசுக்கு எதிராக எடுக்க வேண்டிய ஐந்து நடவடிக்கைகள்..!