தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை... காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாகத் தொடக்கம்..!

By Asianet TamilFirst Published Jan 10, 2019, 3:46 PM IST
Highlights

நாடாளுமன்றத் தேர்தலில் தொகுதி உடன்பாடு தொடர்பாக காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாகப் பேச்சுவார்த்தையைத் தொடங்கியிருக்கிறது. மும்பை சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரைச் சந்தித்துப் பேசினார். 

நாடாளுமன்றத் தேர்தலில் தொகுதி உடன்பாடு தொடர்பாக காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாகப் பேச்சுவார்த்தையைத் தொடங்கியிருக்கிறது.

மும்பை சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது இரு கட்சியினரும் தொகுதி உடன்பாடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். ஆரம்பக் கட்டப் பேச்சுவார்த்தையில் இரு கட்சிகளும் மஹாராஷ்டிராவில் உள்ள 48 தொகுதிகளையும் சரிசமமாகப் பிரித்து போட்டியிடுவதென முடிவு செய்திருக்கிறார்கள். 

இதன்படி இரு கட்சிகளும் தலா 24 தொகுதிகளில் போட்டியிட உள்ளன. மஹாராஷ்டிராவில் மேலும் சில உதிரிக் கட்சிகள் இக்கட்சிகளின் கூட்டணியில் உள்ளன. இந்தக் கட்சிகளுக்கு காங்கிரஸும் தேசியவாத காங்கிரஸும் இடங்களை விட்டு கொடுக்கவும் முடிவு செய்துள்ளன. எந்தெந்த தொகுதியில் இரு கட்சிகளும் போட்டியிடும் என்பது பற்றி குழு அமைத்து முடிவு செய்யவும் இரு கட்சிகளும் தீர்மானித்துள்ளன. 

ஏற்கனவே பாஜக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கி தீவிரப்படுத்தியுள்ள நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சியும் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளது. ஜனவரி இறுதியில் தமிழகத்தில் தொகுதி உடன்பாடு தொடர்பாக திமுகவுடன் பேச்சுவார்த்தை தொடங்கும் என்று காங்கிரஸ் தலைவர்கள் தெரிவிக்கிறார்கள்.

click me!