அடடே.... மேடையில் அமைச்சருக்கு நேர்ந்த சோகம்..! ஓடோடி வந்து காப்பாற்றிய கலெக்டர்..!

By ezhil mozhiFirst Published Jan 26, 2019, 5:35 PM IST
Highlights

மத்திய பிரதேச காங்கிரஸ் அமைச்சர் இமார்த்தி தேவி, குடியரசு தின விழா கொண்டாட்டத்தின் போது மேடையில் பேச முடியாமல் பதற்றத்தில், கலெக்டரை அழைத்து மீதி உரையை படிக்க சொன்ன சம்பவம் இன்று நடந்துள்ளது.

அடடே.... மேடையில் அமைச்சருக்கு நேர்ந்த சோகம்..! ஓடோடி வந்து  காப்பாற்றிய கலெக்டர்..!
 
மத்திய பிரதேச காங்கிரஸ் அமைச்சர் இமார்த்தி தேவி, குடியரசு தின விழா கொண்டாட்டத்தின் போது மேடையில் பேச முடியாமல் பதற்றத்தில், கலெக்டரை அழைத்து மீதி உரையை படிக்க சொன்ன சம்பவம் இன்று நடந்துள்ளது.

குடியரசு தின உரையை வாசித்த போது, அமைச்சர் தடுமாறி உள்ளார். நிலைமையை அவரே புரிந்துகொண்டு அருகில் நின்றிருந்த மாவட்ட ஆட்சியர் பரத் யாதவை அழைத்து, மீதி உரையை நிகழ்த்த சொன்னார். இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் இமார்த்தி தேவி, "எனக்கு கடந்த இரண்டு தினங்களாக உடல் நிலை சரியில்லை. வேண்டும் என்றால் மருத்துவரை கேட்டுக் கொள்ளுங்கள்" என தெரிவித்து அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். 

நிலைமையை சமாளிக்க அமைச்சர் இப்படி பதில் அளித்தாலும் காங்கிரஸ் வட்டாரதத்தில் இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. காரணம் இவர் ஏற்கனவே இரண்டு முறை சட்ட மன்ற உறுப்பினராக  தேர்ந்தெடுக்கப்பட்டவர். 2008 மற்றும் 2013 இல் சட்டமன்ற உறுப்பினராக இருந்த அமைச்சர் இப்படி ஒரு சம்பத்தை நடக்க விட்டுட்டார் என விமர்சனங்கள் எழ தொடங்கி விட்டன.
 
Madhya Pradesh Minister Imarti Devi in Gwalior asks the Collector to read out her speech pic.twitter.com/vEvy1YVjRM

— ANI (@ANI)
click me!