அமைச்சர் பதவியை தூக்கி எறிந்த சித்து... பஞ்சாப் அரசியலில் திடீர் பரபரப்பு..!

Published : Jul 14, 2019, 01:41 PM IST
அமைச்சர் பதவியை தூக்கி எறிந்த சித்து... பஞ்சாப் அரசியலில் திடீர் பரபரப்பு..!

சுருக்கம்

முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து தனது அமைச்சர் பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து தனது அமைச்சர் பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து. காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த இவர் சமீபத்தில் நடைபெற்ற பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அங்கு அமைச்சராகவும் பதவி வகித்து வந்தார். இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங்க்கும், சித்துவுக்கும் மோதல் போக்கு நிலவி வந்தது. இதனால், அவர் வகித்து வந்த இலாகா பறிக்கப்பட்டு, வேறு அலாகா வழங்கப்பட்டது.

 

இதுதொடர்பாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியிடம் சித்து புகார் அளித்திருந்தார். பின்னர், மக்களவைத் தேர்தலில் பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டார். அப்போது, ராகுல் காந்தி அமேதியில் தோற்றால், நான் அரசியலை விட்டே விலகுவதாக அறிவித்திருந்தார். இதுதொடர்பாக பாஜகவினர் பலரும் சித்துவை விமர்சித்து வந்தனர். 

இந்நிலையில் பஞ்சாப் முதல்வர் முதல்வர் அமரீந்தர் சிங்குடன் தொடர்ந்து பிரச்சனை இருந்து வந்த நிலையில் அமைச்சர் பதவியை சித்து ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா செய்தது குறித்து ஜூன் 10-ம் ராகுல்காந்திக்கு அனுப்பிய கடிதத்தை சித்து டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

அஸ்ஸாமை பாகிஸ்தானின் ஒரு பகுதியாக மாற்ற காங்கிரஸ் சதி செய்தது - பிரதமர் மோடி குற்றச்சாட்டு
MGNREGA மாற்றங்கள்: ஏழைகள், விவசாயிகள் மீதான தாக்குதல் - சோனியா காந்தி விமர்சனம்