நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை... உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

By vinoth kumarFirst Published May 19, 2022, 3:07 PM IST
Highlights

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து 1988-ம் ஆண்டு நடைபெற்ற சாலை விபத்தில் குர்னம்சிங் என்ற முதியவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஹரியானா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கின் விசாரணையில் சித்துவிற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 

பஞ்சாப் முன்னாள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்துக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து 1988-ம் ஆண்டு நடைபெற்ற சாலை விபத்தில் குர்னம்சிங் என்ற முதியவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஹரியானா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கின் விசாரணையில் சித்துவிற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 

இந்த தீர்ப்பை எதிர்த்து சித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இது தொடர்பான வழக்கு பல ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. காங்கிரஸ் முக்கிய பிரமுகர் ஒருவருக்கு ஒரு ஆண்டு தண்டனை விதித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

click me!