
மோடியின் கட்டிப்புடி வைத்தியத்தை கிண்டல் செய்து தனது டிவிட்டர் பக்கத்தில் கிண்டல் செய்துள்ளது காங்கிரஸ் கட்சி.
வெளிநாட்டுத் தலைவர்கள் இந்தியா வரும்போது, அல்லது மோடி வெளி நாடுகளுக்குச் செல்லும் போது, பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டுத் தலைவர்களை ஆரத்தழுவி வரவேற்பார். அவரின் இந்தச் செயல் குறித்து கிண்டல் செய்யும் விதமாக காங்கிரஸ் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறிப்பாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு இந்தியா வந்திருக்கும் நிலையில், அவரை விமான நிலையத்தில் கட்டித் தழுவி வரவேற்றார் மோடி. அதனைக் குறிப்பிட்டு கிண்டல் செய்துள்ளது கான்க்கிரஸ் கட்சி.
பொதுவாகவே, மற்ற நாட்டு தலைவர்களை சந்திக்கும் போது பிரதமர் மோடி அவர்களை ஆரத் தழுவி, நட்பு முறையை உணர்த்தி அவர்களை வரவேற்கிறார். இரு தலைவர்கள் சந்திக்கும் போது வெறுமனே கை குலுக்கியே பார்த்து வந்த மக்களுக்கு இது வித்தியாசமாகத்தான் தெரிகிறது. ஆனால், இதனை கிண்டல் செய்யும் விதமாக காங்கிரஸ் கட்சி, தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில் மோடி வெளிநாடுகளுக்குச் செல்லும் போதும், வெளிநாட்டுத் தலைவர்கள் இந்தியா வரும் போதும் அவர்களை பிரதமர் மோடி ஆரத்தழுவி வரவேற்றதை கிண்டல் செய்துள்ளது.