காங்கிரஸ் சமூக ஊடகத்துக்கு புத்துயிர் ஊட்டிய நடிகை யார் தெரியுமா?

Asianet News Tamil  
Published : Oct 11, 2017, 03:04 PM ISTUpdated : Sep 19, 2018, 01:17 AM IST
காங்கிரஸ் சமூக ஊடகத்துக்கு புத்துயிர் ஊட்டிய நடிகை யார் தெரியுமா?

சுருக்கம்

congress active in social media heroine

காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடக அணிக்கு புத்துயிர் ஊட்டும் விதமாக இளம் நடிகை ஒருவர் தலைமை ஏற்று சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்.

பிரதமர் மோடியின் திட்டங்களை டுவிட்டரில் ‘கலாய்ப்பது’, ராகுல்காந்தியின் பிரசாரங்களை மக்களிடம் கொண்டுசெல்வது, காங்கிரஸ் கட்சியின் கருத்துக்களை சூடாக பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டிராகிராமில்தெரிவிப்பது என அனைத்தும் இவர் வந்தபின் வேகமெடுத்துள்ளது.

இவர் வேறுயாருமல்ல, முன்னாள் கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாவின் பேத்தியும் நடிகையுமான ரம்யா ஸ்பந்தனா தான்(‘குத்து’ படபுகழ் ரம்யா). இவர் கடந்த மே மாதம் காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடக அணிக்கு பொறுப்பு ஏற்றதில் இருந்து சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

குஜராத், இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில், அந்த தேர்தலில் காங்கிரஸ்கட்சியின் சிறப்பாக முன்னெடுத்துச் செல்ல சமூக ஊடக அணிக்கு இலக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நடிகை ரம்யா ஸ்பந்தனா நிருபர்களிடம் கூறியதாவது-

சிறிய அளவிலான அணியாகத்தான் இப்போது இருக்கிறோம். ஆனால், மிகவும் கட்டமைக்கப்பட்ட நிர்வாகத்துடன் மாநிலங்களுக்கு 4 பேர் பொறுப்பேற்றுள்ளோம். மாநில அணிகளுடன் இணைந்து செயலாற்றுகிறோம். மாநிலங்களில் எந்த முக்கியமான சம்பவங்கள் நடந்தாலும், அதாவது பேரணி, ஊர்வலம், நிர்வாக ரீதியான பிரச்சினை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றை மாநில அமைப்புகள் கையாளும் போது அவர்களோடு இணைந்து செயலாற்றுகிறோம்.

புள்ளிவிவரங்களை ஆய்வு செய்ய குழு, மொழி பெயர்பாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், அரசியல் வல்லுநர்கள் குழு ஆகியோர் செயல்படுகிறார்கள். நாங்கள் சிறிய அணியாக இருந்தபோதிலும், மிகவும் ஆத்மார்த்தமாக பணியாற்றும் தொண்டர்களின் உதவியுடன் சிறப்பாக பணியாற்றுகிறோம். சமீபத்தில் எங்களின் மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது, குஜராத்தில் புல்லெட் ரெயில் திட்டத்தை மோடி தொடங்கி வைத்தபோது, ‘குஜராத்தில் வெறிபிடித்த வளர்ச்சி’
என்ற வார்த்தை மக்களிடம் சில நிமிடங்களில் வைரலாகப் பரவியது.

இமாச்சலப்பிரதேசத்துக்கு ராகுல்காந்தி சனிக்கிழமை செல்ல இருக்கிறார். அங்கு செல்லும் போது, அங்கு ஆட்சியில் உள்ள காங்கிரஸ் அரசு குறித்தும், சாதனைகள் , திட்டங்கள் குறித்தும் நாங்கள் எடுத்துரைப்பது அவசியம். எங்களால் எந்த அளவுக்கு சிறப்பாகச் செய்ய முடியுமோ அதைச் செய்வோம்.

நான் தலைமை ஏற்றபின், ராகுல்காந்திக்கு டுவிட்டரில்பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளேன். அதேபோல, மாநில, தேசிய அளவிலான தலைவர்களை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

விண்வெளி நாயகனுக்கு வீர விருது.. சுபான்ஷு சுக்லாவுக்கு 'அசோக் சக்ரா' விருது.. மத்திய அரசு கெளரவம்!
மம்முட்டிக்கு பத்மபூஷன் விருது.. அச்சுதானந்தன் முதல் ரோகித் சர்மா வரை.. பத்ம விருதுகள் முழு லிஸ்ட்!