குஜராத் தேர்தலில் ஒப்புகை சீட்டை வைத்து வாக்குகளை சரிபார்க்க வேண்டும் - காங்கிரஸ் மனு தள்ளுபடி

Asianet News Tamil  
Published : Dec 15, 2017, 09:42 PM ISTUpdated : Sep 19, 2018, 01:41 AM IST
குஜராத் தேர்தலில் ஒப்புகை சீட்டை வைத்து வாக்குகளை சரிபார்க்க வேண்டும் - காங்கிரஸ் மனு தள்ளுபடி

சுருக்கம்

congres party report is cancelled by supreme court about gujarat election

ஒப்புகைச் சீட்டையும், வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகளையும் சரிபார்க்கக் கோரி காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நம் நாட்டில் தேர்தல்களில் வாக்குச்சீட்டு முறை நீக்கப்பட்டு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த எந்திரத்தில் தில்லுமுல்லு செய்ய முடியும் என பல்வேறு தரப்பினரும் புகார் கூறி வருகின்றனர். எனவே, வாக்களிக்கும்போது யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்துகொள்ளும் வகையிலான, ஒப்புகைச் சீட்டு வழங்கும் வகையில், வாக்காளர் சரிபார்ப்பு காகிதப் பதிவு எந்திரம் (விவிபிஏடி) அறிமுகம் செய்யப்பட்டது.

இதை வைத்து வாக்காளர்கள் வேண்டுமானால் அறிந்துகொள்ளலாம். அதன் மீது மக்களுக்கு நம்பிக்கை வர வேண்டும் என்றால் இரண்டையும் சரிபார்க்க வேண்டும்.

அதாவது, வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகளும், விவிபிஏடி எந்திரத்தில் பதிவான சின்னங்களின் எண்ணிக்கையும் ஒத்துப்போகிறதா? என்பதை சரிபார்க்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், குஜராத் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், இந்த பிரச்சினையை காங்கிரஸ் கையில் எடுத்துள்ளது. இதற்காக உச்ச நீதிமன்றத்தில் குஜராத் மாநில காங்கிரஸ் கமிட்டி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையின்போது குறைந்தது 25 சதவீத விவிபிஏடி பேப்பர்களையும், அதனுடன் இணைந்த வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகளையும் சரிபார்க்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது காங்கிரசின் மனுவை ஆய்வு செய்த உச்ச நீதிமன்றம், இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறி தள்ளுபடி செய்தது. அத்துடன், காங்கிரஸ் தரப்பில் தேர்தல் சீர்திருத்தங்களுக்காக உச்ச நீதிமன்றத்தில் தனியாக மனு தாக்கல் செய்யலாம் என தெரிவித்தது.

PREV
click me!

Recommended Stories

இந்தியாவின் நேரடி வரி வசூல் ₹18.38 லட்சம் கோடி..! டிரம்பின் வரி அடாவடியிலும் அசத்தல் வரப்பிரசாதம்..!
‘முடிந்தால் என் காலை வெட்டுங்கள்...’ மிரட்டும் சிவசேனா... அண்ணாமலை பகிரங்க சவால்..!